இரக்கமற்ற அரக்கர்களினால் படுகொலை செய்யப்பட்ட-புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி அமரர் வித்தியாவின் 45ம் நாள் நினைவு தின அஞ்சலியும்-ஈழத்துக் கலைஞர்களின் படைப்பில் கிளியூர் றமணின் உருவாக்கத்தில் வெளியாகியுள்ள-வித்தியா கீதங்கள் என்னும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் 26.06.2015 வெள்ளிக்கிழமை அன்று யா/புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மதபோதகர்கள்-ஆசிரியர்கள்-மாணவர்கள்-பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டு-வித்தியாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.