ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் 17.06.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
ஏழாறுபிரியும் கடலோரம்
எழில் கொஞ்சி விளையாடும் கரையோரம்
இராஜகோபுரப்பதி கொண்ட நாயகியாள் உற்சவமாம்
கருநாகம் மீதிலமர்ந்து
கருணைக்கடலென வீற்றிருந்து
அருளும் அமுதும் மன நிறைவும் தரும்
எங்கள் நயினை நாகபூஷணிக்கு உற்சவமாம்
தேவரும் மூவரும் வாழ்த்த
விண்ணும் மண்ணும் போற்ற
கடலோடு காற்றெழுந்து மகிழ
எங்கள் நயினையின் நாயகியாளின்
உற்சவமாம்
அலையென அடியார் திரள
அனலையின் நாகமும் பூச்சூடி வாழ்த்த
ஆனந்தம் கொண்டே
அருள்மழை பொழியும் நாயகியாள் உற்சவமாம்….!!!!
“அம்மையே போற்றி அகிலமே போற்றி அகிலாண்டேஸ்வரியே போற்றி.”
அன்புடன்…
அன்னைமகன்.
இம்முறை அன்னை நாகபூஷணி அம்பாளின் திருவருளினால் -எமது இணையத்தின் ஊடாக-கொடியேற்றத் திருவிழாவினை முழுமையாகப் பதிவு வெளியிட்டிருந்தோம்.அதனைத் தொடர்ந்து 21.06.2015 அன்று நடைபெற்ற-அன்னையின் 5ம் நாள் பகல் மற்றும் இரவு முத்துச் சப்பறத் திருவிழாவின் பதிவினை -உலகமெல்லாம் பரந்து வாழும் நயினை நாகபூஷணி அம்மனின் பக்தர்களின் பார்வைக்கு எடுத்து வந்துள்ளோம்.
இதனைத் தொடர்ந்து வரும் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் எமது இணையத்தின் ஊடாக நீங்கள் பார்வையிடலாம்.