பாடசாலை மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை ஊக்குவிப்பதற்காக கல்வித்திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் கராட்டி சுற்றுப்போட்டியில் 2015 ஆண்டுக்கான வடமாகாண போட்டிகள் வவுனியா சி.சி.ரி. என்.எஸ். பாடசாலையில் அண்மையில் நடைபெற்றது.
யாழ்.மாவட்டம் சார்பாக வேலணை மத்திய கல்லூரி மாணவனும் கராட்டி பயிற்றுவிப்பாளர் “சென்சேய் முருகானந்தனின் சீடனுமான முருகானந்தன் முரளி 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான “குமித்தே” கராட்டி போட்டியில் பங்கு கொண்டு 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
மக்களிடையே அதிகளவு செல் வாக்கு செலுத்தாத கராட்டி போன்ற தற்காப்புக் கலைகள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தற்போது புத்துயிர் கொடுக்கப்பட்டு வருவதனால் பாரம்பரிய தற்காப்பு கலைகள் இளம் சந்ததியினரிடையே மீண்டும் விரும்பி பயிலும் வகையில் ஒரு உந்துதலை ஏற்படுத்தியுள்ளதுடன் பாடசாலை மாணவிகளும் இக்கலைகளை பயில்வதன்மூலம் தமது சுய பாதுகாப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும் என சமூக ஆர்வ லர்கள் தெரிவித்துள்ளனர்.