தீவகம் வேலணை கிழக்கைச் சேர்ந்த, வைத்திலிங்கம் சபாரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

தீவகம் வேலணை கிழக்கைச் சேர்ந்த, வைத்திலிங்கம் சபாரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

5tled-5 copy66666666666

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சபாரட்ணம் அவர்கள் 16-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

யோகநாதன்(பிரான்ஸ்), ஜெகநாதன்(கனடா), தவமலர்(இலங்கை), சோதிமலர்(இலங்கை), சபாநாதன்(பிரான்ஸ்), ராசமலர்(பிரான்ஸ்), ராசேந்திரன்(கனடா), ராசகுமார்(பிரான்ஸ்), கோமளாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தியாகராஜா(பொன்னண்ணா- டென்மார்க்), அமிர்தலிங்கம்(பிரான்ஸ்), பாலச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானேஸ்வரி, தயாளினி, காலஞ்சென்ற யோகராஜா, பாலசுப்பிரமணியம், தர்ஷினி, தர்மகுணராஜா, திருமகள், விஜயகலா, காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லம்மா, தவமணிதேவி, வீரலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்புச் சகலனும்,

தர்மிலா, கமலராசன், ஜெர்மிலா, சன்ஜீவன், கீர்த்திகா, ஆராதிகா, சந்திகா, சயனுதா, இந்துஜா, சரணியா, ஞானுஸ், சாருஜன், நிரோஜன், விஸ்ணுஹாரினி, ரிஷோபன், ரிசாணியா, ரிதுயன், தர்ஷிகா, ரிசிகேசன், பிரகேஷின், தனுஸ், யதி, ஹரிஷ், விகாஷ், கனுஷி, ஓவியா, துர்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கிறிஸ், சாருஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2015 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை 20 மணல்தரை லேன், திருநெல்வேலி என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர்  பி.ப 04:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அன்னாரின் சகோதரர் –திரு வேலணையூர் பொன்னண்ணா-டென்மார்க்
தொடர்புகளுக்கு…..
பாலா(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: +94217200070
ராசகுமார்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33952004786
ஜெகநாதன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167245029

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux