இலங்கையின் வடபகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா 15.06.2015 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
தூக்குகாவடி, பால் காவடி, தீச் சட்டி ஏந்தியும், அங்க பிரதிஷ்டை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டதாக அறிய முடிகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.
நிழற்படங்கள்-திரு I.சிவநேசன்-வேலணை