யாழ். நகர உணவகங்களின் சீர்கேடுகளைத் தடுக்க…

யாழ். நகர உணவகங்கள் ஹோட்டல்களில் சுகாதார சீர்கேடுகளைத் தடுக்க 10 சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 55 பொலிஸார் அடங்கிய விசேட குழு நேற்று திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்ததாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவா தெரிவித்தார்.
 

யாழ். நகர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார சீர்கேடுகளைத் தடுத்து மக்கள் மத்தியில் பரவும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகமும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. 


இவ் விசேட குழு யாழ்.நகரிலும் சுற்றுப் புறத்திலும் உள்ள உணவகங்கள் ஹோட்டல்களுக்கு நேரடியாகச் சென்று பழுதடைந்த உணவுப் பண்டங்கள் சுகாதார முறையற்ற உணவு வழங்கல்கள் என்பன தடுக்கப்படும். 

அதேநேரம் உணவகங்களின் சுற்றுபுறத்தில் தண்ணீர் தேங்கும் இடங்கள் இருப்பதால் டெங்கு பரவும் ஆபத்தும் உள்ளதாகத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திடீர் பரிசோதனை மூலம் சுகாதார சீர்கேடுகள் காணப்படும் உணவகங்கள் ஹோட்டல் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். 

இதன் மூலமே யாழ்.மாவட்டத்தில் தொற்று நோய்ப் பரம்பலைத் தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux