வேலணை பிரதேச செயலருடன்-பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட முக்கிய கலந்துரையாடலின் விபரங்கள் இணைப்பு!

வேலணை பிரதேச செயலருடன்-பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட முக்கிய கலந்துரையாடலின் விபரங்கள் இணைப்பு!

DSCF4280 copy

தீவகம் வேலணை பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்ட-சகல கிராமசேவையாளர்களின் பிரிவில் இயங்கும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான அவசர கலந்துரையாடல் ஒன்றினை-வேலணை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீஸ்சன் அவர்கள் கடந்த 03.06.2015 புதன்கிழமை அன்று காலை 11 மணிக்கு வேலணை பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடத்தினார்.

இக்கலந்துரையாடலில் சிறுவர் பாதுகாப்பு  தொடர்பாகப்பேசப்பட்டதுடன்- கீழ் வரும் முக்கிய விடயங்கள் பிரதேச செயலர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் கலந்துரையாடப்பட்டு-பொதுமக்களின் கவனத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளன.

அவையாவன…

01-தீவக கிராமங்களில் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக காணப்படும் பற்றைகள் யாவும் வெட்டி அகற்றி துப்பரவு செய்யப்படவேண்டும்.

02-இப்பற்றைகளை வெட்டி அகற்ற-அப்பகுதி மக்களும்-பொது அமைப்புக்களும் முன் வரவேண்டும்.

03-வெளிநாடுகளிலும்,தீவகத்திற்கு வெளியிலும் வசிக்கும் காணி உரிமையாளர்கள் தங்கள் காணிகளில் காணப்படும் பற்றைகளை வெட்டி துப்பரவு செய்ய முன் வரவேண்டும்.

04-மண்கும்பான்-அல்லைப்பிட்டி-வேலணைப் பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதனால்-மீறி மண் அகழ்வில் ஈடுபடுவோரை-பொதுமக்களோ அல்லது பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளோ காணும் பட்சத்தில் 0774949933 இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும்.

05-தீவகத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மதுபான விற்பனையினை தடுப்பதற்கும் பொதுமக்கள் ஒத்துளைப்பு வழங்க முன் வரவேண்டும்.

06-அல்லைப்பிட்டியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வயல்  நிலங்களில் Maga நிறுவனத்தினால் கடந்த வருடம் கொட்டப்பட்ட  கடல் மணலினை அகற்ற உடனடி நடைவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

07-சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் அனைவரும் கூடிய கவனம் செலுத்த முன் வரவேண்டும்.

DSCF4279 copy DSCF4278 copy DSCF4277 copy DSCF4273 copy DSCF4275 copy DSCF4275 copy DSCF4274 copy DSCF4273 copy DSCF4271 copy DSCF4270 copy DSCF4269 copy DSCF4268 copy DSCF4266 copy DSCF4265 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux