யாழ் தீவகத்தின் தலைத்தீவாகிய, மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையில் காவல் தெய்வமாய்,வீற்றிருந்து அருள்பாலிக்கும் பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மனின் குடமுழுக்கு விழா 08.06.2015 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மண்டைதீவிலும்-மண்டைதீவுக்கு வெளியிலும் வசிக்கும்-கண்ணகி அம்மனின் பக்தர்கள் பெருமளவில் வருகைதந்து அம்மனின் குடமுழுக்கு விழாவில் பக்தியோடு கலந்து கொண்டதாக அறிய முடிகின்றது.
அல்லையூர் இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற-கண்ணகி அம்மனின் குடமுழுக்கு விழாவின் நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
நன்றி-சென்னியூர் இணையம்