யாழ் தீவகம் வேலணையில் பிரசித்தி பெற்ற,முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் பள்ளம்புலம் முருகன் ஆலயத்திற்கு வேண்டிய புதிய கேணி ஒன்றினை அமைக்கும் பணிகள் தற்போது முன்னேடுக்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் வாழும் பள்ளம்புலம் முருகன் அடியார்களின் நிதியுதவியுடன் பல இலட்சங்கள் செலவில் இக்கேணி அமைக்கப்பட்டு வருவதாக வேலணையிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு முன்னர் இக்கேணி அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் என்று ஆலய நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.