இந்து மகா சமுத்திரத்தின் முத்தென விளங்கும் ஈழவள நாட்டின் வடபால் சைவமும்,தமிழும் தழைத்தோங்கும் தீவகத்தின் வேலணை மேற்கூரில்-அழகான மருதநிலம் சூழ்ந்த,பெரியபுலம் என்னும் திவ்விய ஷேத்திரத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரியும்-எல்லாம் வல்ல கணபதிப்பிள்ளையாரின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 23.05.2015 சனிக்கிழமை அன்று கொடியே்ற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தினமும் தொடர்ந்து பதினொரு நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதாகவும்-வரும் 01.06.2015 திங்கட்கிழமை அன்று தேர்த்திருவிழாவும் மறுநாள் 02.06.2015 செவ்வாய்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23.05.2015 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற கொடியேற்றத்திருவிழாவின் நிழற்படங்களை-கீழே இணைத்துள்ளோம்.