வேலணை சாட்டியில் வேரோடு சாய்ந்த தென்னையால்,பல மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை சாட்டியில் வேரோடு சாய்ந்த தென்னையால்,பல மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து-படங்கள் விபரங்கள் இணைப்பு!

image-ad2435e356c268a7390ce7c9e01891d543d78255ef7ce81d55d6cee53f6a610f-V

தீவகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் குளங்கள் மற்றும் தாழ்வு நிலப்பகுதிகளில்  நீர் நிறைந்து மாரிகாலத்தைப் போன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீசிய கடும் காற்றினால்-சாட்டி பிரதான வீதியின் குறுக்கே தென்னை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததைத் தொடர்ந்து  சில  மணிநேரமாக போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

வடபகுதியில் தொடர்ந்தும் மழை சில தினங்கள் வரை நீடிக்கலாம் என்று யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள வானிலை மையம் அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோடை காலத்தில் வெள்ளம் போடும் அளவிற்கு மழை பெய்வது ஆச்சரியமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்ற போதிலும்-கடந்த 13 வருடங்களுக்கு முன்னரும் இப்படி கோடையில் மழை பெய்ததாக சிலர் கூறுகின்றனர்.

image-6310a3210c25a67b573d695be368238c9122cb1389089f397b4957b3ff90795d-V image-4858926757ba33445c129bbfad4e0dcb5d3191a9ab93196b11558bc8bf3ed4c3-V image-8e018c0797b4df32ddf8263d55a5e6c64a260597d66b09ce773040d40eb2b170-V (1) image-10a66274f9b082843c0b2884923ebbe7a78153985d429987a684b846ffb0af2e-V image-04281eda8e9109c2873c962b4cec7ae43791d46ae0ffffdf9238292ac1d7a885-V image-fe0968a7240797b7c823d85022debb7bc0aa8d4d7303e8101aeaa3dbe65d72bd-V image-3a7a39a2745d607d5f55cca01104a7bd5a1cc76af553abf420ce66918165b188-V image-6cab482f4e75959f59fd47d083d3dd1c8fdd097fca3bc9c9933507d223239d68-V image-93ba480e4630327cdf563d523de45f0829f84d9bee6bfbb0798f0e850013d591-V image-3424beebee06bfe88bed100a6b58577dcc9327be6d905b761a440a299efcf2f1-V image-4d10828d53759946c560da0f276358dd3775bf65553ffe8dd308edd97041886b-V image-83ffaa0b6bd1ee3b52b1c22925f8233aea982e94152192e36ab54d813523dada-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux