பெரிய பெரிய குழாய்கள்-பெரும் எண்ணிக்கையில் பணியாளர்கள் என்று பெரும் எடுப்பிலான வேலைத்திட்டம் ஒன்று யாழ் தீவகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவகம் மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள,நீர் வழங்கும் மையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலத்தின் கீழ் குழாய்கள் பொருத்தும் பணி-தற்போது அல்லைப்பிட்டி கிராமசபைின் உப அலுவலகம் வரை வந்துள்ளதாகவும்-தொடர்ந்து மண்டைதீவை நோக்கியும் பின்னர் மண்டைதீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கியும் இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இரணைமடுக் குளத்து நீருக்குப் பதிலான -மாற்றுத் திட்டத்திற்காகவே-இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,அதிகாரிகள் தெரிவித்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னணியில் உள்ள உண்மைதன்மையினை விபரமாக அறிந்து -மிக விரைவில் மீள் பதிவு செய்வோம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.