தீவகம் மண்கும்பான் சாட்டி வெள்ளைக் கடற்கரை பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள செகுனா செய்யுத்தீனா சுல்தான் அப்துல் காதர்(ரஹ்) அவர்களின் வருடாந்த ஞாபகார்த்த கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமாகி தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்று- ரஜப் பிறை 12 இல்(1.05.2015) வெள்ளிக்கிழமை அன்று குர்ஆன் தமாமும் மவ்லூதும் ஓதி நாட்டுக்காகவும் நாட்டு மக்களிற்காகவும் சமாதானம் வேண்டி துஆப் பிராத்தனையுடன் கொடி இறக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு அல்லாஹ்வினுடைய பறக்கத்தையும் துஆ பறக்கத்தையும் பெற்றுக் கொள்ள-இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் வருகை தந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவகம் மண்கும்பான் பகுதியில் அமைந்துள்ள- மிகப் பழமையான இப்பள்ளிவாசல் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருப்பதாகவும்-இப்பள்ளிவாசலின் புனரமைப்புக்கு உதவிட முன் வருமாறும்-இப்பள்ளி வாசல் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீவகத்தில் மண்கும்பானில் இரண்டு பள்ளி வாசல்களும்,நயினாதீவில் ஒரு பள்ளி வாசலும்,அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மண்கும்பானில் அமைந்துள்ள-இப்பள்ளி வாசலுக்குள் நூற்றாண்டு பழமையான ஆலமரம் ஒன்று கம்பீரமாக நிற்பது-இப்பள்ளி வாசலின் பழமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
நிழற்படங்கள்-திரு I.சிவநேசன்-வேலணை…