அல்லையூர் இணையத்தின் அன்பான வேண்டுகோள்!
அல்லையூர் இணையமானது-அறப்பணி மற்றும் ஆன்மீகப்பணி ஆகிய இரண்டினையும்,முதற்பணியாகக் கொண்டு -தனது இணைய சேவையினை நடத்தி வருவதுடன்-தற்போது தீவக மக்களின் பேராதரவினைப் பெற்ற,இணையமாகவும் வளர்ந்து வருகின்றது.
எமது இணையமானது கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக அறப்பணியினை முதற்பணியாக மேற் கொண்டு-இலங்கையின் வடகிழக்கில் யுத்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட-மாணவர்கள்,முதியோர்கள்,வலுவிழந்தோர் போன்றவர்களுக்கு எம்மாலான சிறு,சிறு உதவிகளை செய்து வருகின்றோம்.
ஆதரவற்றோருக்கு குறைந்தது மாதத்தில் ஒரு தடவையாவது உணவு வழங்குவதனை எமது இணையத்தின் முதற்பணியாகக் கொண்டு தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றோம்.
உங்கள் பேராதரவோடு-இதுவரை வடகிழக்கில் 80 தடவைகளுக்கு மேல் ஆதரவற்றவர்களுக்கு சிறப்பு உணவு வழங்கியுள்ளோம்.மேலும் தொடர்ந்து இப்பணியினை மேற் கொள்வதற்கு உங்கள் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம்.
நீங்கள் இரக்க சிந்தை உள்ளவரானால்….
உங்கள் பிள்ளைகளின் பிறந்த தினத்தில்..
உங்கள் பெற்றோர்களின் நினைவு தினத்தில்…
உங்கள் திருமண நன்நாளில்…இன்னும் பல…
இப்படியான நினைவு தின நாட்களில்-ஆதரவற்றோர்களுக்கு ஒரு நேர உணவு வழங்க முன் வர வேண்டும் என்று அன்போடும் பணிவோடும் கேட்டுக் கொள்கின்றோம்.
இதில் உங்களுக்கு என்ன லாபம் இருக்கிறது?இப்படிச் சிலர் எம்மிடம் கேட்டார்கள்!
பொருள் இருப்பவர்களிடமிருந்து,இல்லாதவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதுவும் ஒரு சேவையே…
உண்டி கொடுத்தோர்-உயிர் கொடுத்தோர் அல்லவா?
எனவேதான் எந்த விதமான சுயநல நோக்கமுமின்றி,கடந்த பல வருடங்களாக உங்கள் பேராதரவோடு இச்சேவையினை மேற் கொண்டு வருகின்றோம்.
தொடர்புகளுக்கு…….
எஸ்.சிவா
இயக்குனர்-அல்லையூர் இணையம்(www.allaiyoor.com)
தொலைபேசி இலக்கம்-0033651071652
மின் அஞ்சல்-info@allaiyoor.com
ஸ்கைப்-allaiyoor
கீழே இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் பற்றுச் சீட்டு என்பன-உங்கள் ஆதரவோடு அல்லையூர் இணையத்தினால் மேற் கொள்ளப்பட்ட நிகழ்வுகளாகும்.