அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த அபிஷேக விஞ்ஞாபனமும்,புனரமைப்புப் பணிகளுக்கான வேண்டுகோளும் இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த அபிஷேக விஞ்ஞாபனமும்,புனரமைப்புப் பணிகளுக்கான வேண்டுகோளும் இணைப்பு!

image-d32b2e373fccc9f2e8566f8e8a2fe8b303293b481864265fc641db7c845fc50a-V

அலைகள் தவழும் அல்லையூல் அமர்ந்து-அருள் மழை பொழியும் அழகனாம்-எங்கள் வேலன் இனிச்சபுளியடி முருகன் தேவஸ்தானத்தின் புனரமைப்பு வேலைகள் மிக விரைவாக நடந்து வருகின்றது.

கடந்த ஆவணி மாதம் முருகப்பெருமான்-பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு,அதன் பின்னர் வெள்ளைக்கல் கொண்டு பொழிந்து மூலஸ்தானம்அர்த்த மண்டபம்-மகாமண்டபம்-கும்ப மண்டபம் மற்றும்பரிபால தெய்வங்களான,பிள்ளையார்,அம்மன்,வைரவர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியவை கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பணிகள்,ஆலய தர்மகத்தா திரு செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் தலைமையில் பல நுட்ப நுணுக்கங்கள் கொண்டு- வேகமாக நடந்து வருகின்றது.

இனிச்சபுளியடி முருகனின் இப்புனரமைப்புப் பணிகளுக்கு,ஊர்மக்கள் பலர் தாமாகவே முன் வந்து உதவியுள்ளதாகவும்-மேலும் நிதி உதவிகளை,ஊர் மக்களிடமிருந்தும்,புலம் பெயர் மக்களிடமிருந்தும் எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளைக்கல் கொண்டு பொழிந்து கட்டப்பட்டு வரும்-இப்புனரமைப்பு பணிகளுக்கு பல இலட்சம் ரூபாக்கள் தேவைப்படுவதாகவும்- எனவே உலகமெல்லாம் பரந்து வாழும் முருக பக்தர்கள்-தங்களால் ஆன நிதியுதவைியையோ,அல்லது கட்டிட உபகரணங்களையோ முன்வந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓம் சரவண பவா!

வேலுண்டு வினையில்லை

மயில் உண்டு பயமில்லை

குகன் உண்டு குறையில்லை-முருகா!

10257468_634752089944869_9137432653232115913_o-1024x475image-6d0853aeab9c79af06902a2c1a8962fd78cdf0d27c6040f8ce876ed23290572d-V (1)image-6b6dd391ae54dd4b8e55a78cd44429a10cfd93e5467cecd7156244379c105246-Vimage-8f3350599f8e4af1885a108ba318fc3ed58002ee251495d34c265bf9f4d5739d-Vimage-817eeacc728e48aac068077e5aa2a1762e3e363528bb75bc7d5a762ba0f1433d-Vimage-e45d01c3e48214e91d7e2b66bf47c592373b0aaa6a487782d30af9a1009e0c4c-Vimage-1554a649d384fcad2a791461ab29cddb6fb41145242dd5eacdc4060adb7dd2f5-Vimage-e839b6615a527181be83c55af21b79cfb89f84ac4ec1e3d3ba8adb7585110817-V11050187_473826039431949_5873602876391048532_o11082257_473826099431943_7068920393406600410_o

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux