அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையாரின் சுற்றுமதில் பணிகள் நிறைவு-வீடியோ, விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையாரின் சுற்றுமதில் பணிகள் நிறைவு-வீடியோ, விபரங்கள் இணைப்பு!

image-83a359c7d0abd6e6b6df761c15a000c27c5c4c6eef66a9778e701dcdd210692e-V (1)

அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தினை புனரமைத்து -மக்களின் வழிபாட்டிற்கு வழி செய்து கொடுப்பதற்காகவும்-மிகப் பழைமையான இவ்வாலயத்தினை அழிய விடாமல் பாதுகாப்பதற்காகவும்-அல்லைப்பிட்டி மக்களுடன் இணைந்து அல்லையூர் இணையம் மேற் கொண்ட விடாமுயற்சியின் பயனாக-தற்போது ஆலயப்புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்-ஆலயத்திற்கான சுற்றுமதில் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள.

பல இலட்சம் ரூபாக்கள் செலவில் ஆலய சுற்றுமதிலினை   திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள்  அமைத்துத் தந்துள்ளார்.

திரு எஸ்.ஆர் அவர்கள் அறப்பணிக்கும்,ஆலயப்பணிகளுக்கும் தொடர்ந்து உதவிவருவதுடன்-ஊர் மக்களுக்கும் உதவிகளைச் செய்து வருபவர் என்பதனையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

அல்லையூர் இணையத்தினால் இதுவரை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நம்மவர்களிடமிருந்து  ஒரு இலட்சத்து அறுபத்தைந்து  ஆயிரம் ரூபாக்கள் திரட்டப்பட்டு-பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மூலம் ஆலய நிர்வாகத்தின் பொருளாளரிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தியினை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோள்

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் அல்லைப்பிட்டி மக்கள்-சிந்தாமணிப் பிள்ளையாரின் ஆலய புனரமைப்புக்கும்-எதிர்வரும் ஆவணி மாதமளவில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கும் உதவிட முன்வருமாறு உரிமையோடு அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

image-766c0cc14b2dd7e3961d946d4daa2c50e0c6a78ef9196b428b19ee621d59056b-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux