தீவகம் புங்குடுதீவில் சிறப்பாக இயங்கி வரும் “சொக்கலிங்கம் அக்கெடமி”மாலைநேர இலவச கல்வி நிலையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் புங்குடுதீவில் சிறப்பாக இயங்கி வரும் “சொக்கலிங்கம் அக்கெடமி”மாலைநேர இலவச கல்வி நிலையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

yjyj

புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களது ஞாபகார்த்தமாக, நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட “சொக்கலிங்கம் அக்கெடமி”யானது 2014 ஆண்டு எட்டாம் மாதம் தொடங்கி வெகு சிறப்பாக இயங்கி வருவது வருகின்றது. ஆரம்பத்தில் 18 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட எமது அக்கெடமியானது பின்பு 28 பிள்ளைகளாக அதிகரித்து கல்வி நடவடிக்கைகள்; விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் 61 பிள்ளைகள் வரையில் அங்கு கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை காலமும் முதலாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு வரையான பிள்ளைகளுக்கே இங்கு பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்று வந்தன. எனினும் பிள்ளைகள் மற்றும் பெற்றோரது வேண்டுகோளுக்கிணங்க இதனை விரிவுபடுத்தி எட்டாம் வகுப்பு வரையிலான பிள்ளைகளுக்கு மாலைநேர வகுப்புகளை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்- தற்போது கிட்டத்தட்ட 61 பிள்ளைகள் வரையில் கல்வி பயின்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு இரண்டு ஆசிரியைகள் கற்பித்தலை மேற்கொண்டு வருவது மாத்திரமல்லாது பிரத்தியேகமாக மற்றொரு ஆசிரியரும் ஆங்கிலம் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டு, கற்பித்தலை முன்னெடுத்து வருகின்றார் என்பதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

அதேவேளை “சொக்கலிக்கம் அக்கெடமி”யை நேரடியாக பார்வையிட்ட அரச அதிகாரிகள் அதிலுள்ள “மலசலகூடம், தண்ணீர் தொட்டி, பாதுகாப்புக்கான நுழைவாயில் (படலை)”, போன்றவற்றை சீரமைத்து வழங்குமாறு கோரியதற்கு இணங்க, அனைத்தும் தற்போது அமரர்கள் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை அவர்களது குடும்பத்தினரால் திருத்தியமைக்கப்பட்டு மேலும் மாலை நேர வகுப்புக்கள் வெகு சிறப்பாக இயங்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

jyjyj punkuditivi-sokkalingam-school-010415 (5) punkuditivi-sokkalingam-school-010415 (8) punkuditivi-sokkalingam-school-010415 (7) punkuditivi-sokkalingam-school-010415 (3) punkuditivi-sokkalingam-school-010415 (6) punkuditivi-sokkalingam-school-010415 (4)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux