மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின்  வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு!

கீழே இணைக்கப்பட்டுள்ள வெள்ளைப்புற்று விநாயகனின் பாடலைக் கேட்ட பின் விபரங்களைப் படியுங்கள்!

வெள்ளைப்புற்று விநாயகனை,நீ வேண்டிக் கொண்டு புறப்படு…

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-வரும் 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகவுள்ளது என்பதனை புலம் பெயர்ந்து வாழும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் அடியவர்களுக்கு அறியத் தருகின்றோம்.  

வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் முக்கிய திருவிழாக்களான,கொடியேற்றம்-சப்பறம்-தேர்-தீர்த்தம் ஆகிய திருவிழாக்கள் அனைத்தையும்- அல்லையூர் இணையத்தின் ஊடாக -வீடியோப் பதிவுகளாகவும்-நிழற்படங்களாகவும்-உங்கள் பார்வைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதனை மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.

இவை தவிர ஏனைய திருவிழாக்களை-எமது இணையத்தின் ஊடாக பதிவு செய்ய விரும்பினால்,திருவிழா உபயகாரர்கள் எம்மோடு தொடர்பினை ஏற்படுத்துமாறு பணிவோடு வேண்டுகின்றோம்.

540443_3175487904298_1178585658_32445120_1234319863_nUntitled-1 copyf copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux