வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்ற, பழைய மாணவர் சங்கத்தின் மாதாந்த,ஒன்று கூடல்-விபரங்கள் இணைப்பு!

வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்ற, பழைய மாணவர் சங்கத்தின் மாதாந்த,ஒன்று கூடல்-விபரங்கள் இணைப்பு!

v-2

வேலணை மத்திய கல்லூரியின்,பழைய மாணவர் சங்கத்தின் தாய்ச்சங்கத்தின் நிர்வாக சபையின் மாதாந்த,ஒன்று கூடலானது 29-03-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு, சங்கத்தின் தலைவரும்,கல்லூரியின் முதல்வருமாகிய,கௌரவ திரு சிவசாமி கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பாக ஆராயப்பட்டதுடன்-இனி வரும் காலங்களில் பழைய மாணவர் சங்கத்தின் நிதி மூலம் வேதனம் வழங்கும்-எந்தப் பதவி வெற்றிடங்களுக்கும்(கல்வி,கல்வி சாரா அலுவலகர்)எமது கல்லூரியின் பழைய மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்குவது-என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.

இத்துடன் எதிர் வரும் யூன் மாதம்-கல்லூரியில் தாய்ச் சங்கத்தின்” உறவுச் சங்கமம்” என்னும் நிகழ்வு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு-அதற்கான குழு ஒன்றும்,கல்லூரியின் முதல்வரின் தலைமையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கானஆரம்ப கட்ட நிதி சேகரிப்பினை-கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக சபை  உறுப்பினர்கள் யாழ்நகர் பகுதியில் மேற் கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி-எதிர்காலத்தில் கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு செலவிடப்படும்-என்ற தீர்மானமும் இறுதியாக நிறைவேற்றப்பட்டது.

தகவல்-அல்லையூர் இணையத்திற்காக,வேலணையிலிருந்து….

திரு I.S. நாதன்

 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux