வேலணை பிரதேச சபை,அல்லைப்பிட்டி இந்து மயானத்திற்குத் தேவையான தகனமேடையும்,தகரக் கொட்டகையும் அமைத்துக் கொடுத்துள்ளது.இதுவரை காலமும் வெட்டவெளியில் வைத்தே -சடலங்கள் தகனம் செய்யப்பட்டு வந்ததுடன் -மழைக் காலங்களில் பெரும் சிரமங்களின் மத்தியிலேயே சடலங்கள் தகனம் செய்ய வேண்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது வேலணை பிரதேச சபையினால் தகரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளதனால் இனி வரும் காலங்களில் சிரமங்களின்றி சடலங்களை தகனம் செய்ய முடியும் என்று கூறப்படுகின்றது.
புதிதாக அமைக்கப்பட்ட தகன மேடையில் திருமதி இராசரத்தினம் தேவியம்மா அவர்களின் உடலே முதலில் எரியூட்டப்பட்டதாகவும்-அவருக்கு முன்னர் அகால மரணமான அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.