மண்டைதீவு கிழக்குக் கடற்கரையில் மக்கள் பயன் பெறும் வகையில் மீன் சந்தையொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு உதவி வழங்கும் நிறுவனம் ஒன்றினாலேயே இந்த மீன் சந்தை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.மண்டைதீவு கடற்றொழிலாளர்களினால் பிடித்து வரப்படும் மீன்கள் இங்கு வைத்து மொத்தமாகவும்-சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மேலும் தெரிய வருகின்றது.