மனைவியை எரித்துக் கொன்று எச்சங்களை புதைத்த பிரித்தானிய நபர் பிரான்ஸில் கைது !!

தனது மனைவியை எரித்து அவரது கருகிய உடல் எச்சங்களை பண்ணையிலுள்ள கொங்கி றீட் தளத்தின் கீழ் புதைத்து வைத்த நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரான்ஸில் திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த வர்த்தகரான ரொபேர்ட் ஹோல் (Robert Hall 55 வயது) தனது மனைவியான ஜொஅன்னாவுடன் (Joanne Hall 49 வயது) மதுபோதையில் ஏற்பட்ட தர்க்க மொன்றின் போது, அவரை தற்செயலாக கொன்றதாக நம்பப்படுகிறது.
இந் நிலையில் ரொபேர்ட் ஹோல் தனது மனைவியை எரித்து கருகிய அவரது உடல் எச்சங்களை தனது 300 ஏக்கர் பண்ணை நிலத்தில் கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்துள்ளார். ரொபேர்ட் ஹோல் மற்றும் ஜொவன்னா தம்பதிகளின் பிள்ளைகளில் ஒருவர் கொடுத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux