பரிஸில் கறிவேப்பிலைக்கு பெரும் தட்டுப்பாடு-தமிழ்மக்கள் பெரும்கவலை-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பரிஸில் கறிவேப்பிலைக்கு பெரும் தட்டுப்பாடு-தமிழ்மக்கள் பெரும்கவலை-விபரங்கள் படங்கள் இணைப்பு!

P1080299

பிரான்ஸின் தலைநகர் பரிஸில்-குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள மளிகை வியாபார நிலையங்கள் அனைத்திலும் கறிவேப்பிலை இல்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு வருவது கறிவேப்பிலை ஆகும்.இக்கறிவேப்பிலை இலங்கை,இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

கடந்த இரண்டு வார காலமாக பரிஸில் அமைந்துள்ள தமிழர்களின் வியாபார நிலையங்களுக்கு கறிவேப்பிலை இறக்குமதி செய்யப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான உண்மைக் காரணத்தை,கடை உரிமையாளர்கள் தெரிவிக்காத  போதிலும் -கறிவேப்பிலை இறக்குமதி செய்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தி பதிவு செய்யப்படும் வரை-லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள மளிகைக்கடைகளில் இருந்து கறிவேப்பிலையினை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.

 

 

ht1465 P1080279 P1080293 P1080282

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux