வேலணை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக-இலங்கை அரசாங்கத்தினால் ஒரு தொகுதி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் வேலணை பிரதேசசபை தவிசாளரிடம் கையளிக்கப்பட்ட புதிய வாகனங்கள் அனைத்தும் வேலணை பிரதேசசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்- வரும் புதன்கிழமை தொடக்கம் -வேலணை பிரதேசசபையின் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் இடம் பெறவுள்ள-வேலைத்திட்டங்களுக்கு இப்புதிய வாகனங்கள் பயன் படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நெடுந்தீவு பிரதேசசபை உட்பட வடமாகாணத்தில் இயங்கும் பத்து பிரதேசசபைகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.