யாழ் தீவகம் புங்குடுதீவு மடத்துவெளி கம்பிலியன் பகுதியில் நவீன இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவகப் பகுதிகளில் காலங்காலமாக மனித வலுவின் மூலமே நெல் அறுவடை செய்யப்படுவது வழமையான ஒன்றாக இருந்த போதிலும்-கால மாற்றத்தினாலும்-தொழிலாளர்களின் பற்றாக்குறையாலும்-இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவே கருதப்படுகின்றது.
எமக்குத் தெரிந்த வரை,தீவகத்தில் புங்குடுதீவு மடத்துவெளிப்பகுதியிலேயே முதன்முதலில் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை மேற் கொள்ளப்படுவதாக அறிகின்றோம்.