அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு தினம் 27-02-2015 வெள்ளிக்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-யாழ் சுன்னாகத்தில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்த,மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயிலும் வாழ்வகத்தில் மதிய சிறப்பு உணவு வழங்கப்பட்டது.
அல்லையூர் இணையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட -அன்னாரின் இந்நிகழ்வுக்கான நிதியினை,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் புதல்வர்( 20.000 ஆயிரம் ரூபாக்களை) வழங்கியிருந்தார்.
அல்லையூர் இணையம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் நினைவு தினம் -ஆண்டுதோறும் அவரது புதல்வர்களினால் அறப்பணியின் ஊடாக நினைவு கூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்,அல்லையூர் இணையம் சார்பிலும்,அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையிடம் வேண்டி நிற்கின்றோம்.
தகவல்(மகன்) திரு அலெக்சாண்டர் அன்ரன் (பரிஸ்)