வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள்  கொடூரத்தாக்குதல் பலர் படுகாயம்- படங்கள் இணைப்பு!

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் கொடூரத்தாக்குதல் பலர் படுகாயம்- படங்கள் இணைப்பு!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த அப்பகுதி மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் கூரிய ஆயுதங்களாலும் கொட்டன்களாலும் காட்டுமிராண்டித்தனமான தாக்குல்களை நடத்தி உள்ளனர்.

kaddaikadu-attack-09

இக்கொடூரமான தாக்குதலில் கட்டைக்காட்டு கிராம மீனவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதிக்குள் நுழைந்த இந்தியர்கள் இத்தாக்குதலை நடத்தி உள்ளனர். சிறிலங்கா கடற்படையினரும் தற்போது இந்தியர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அப்பிரதேச மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று இரவு வடமாராட்சி கிழக்கு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்களின் பல கோடிக்கணக்கான பெறுமதியான வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை இந்திய மீனவர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
இந்தச் சம்பவங்களை கண்டித்து இன்று அப்பகுதி மீனவர்கள் கடற்கரையில் திரண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும்படி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி உள்ளனர்.

kaddaikadu-attack-05
kaddaikadu-attack-07
kaddaikadu-attack-08kaddaikadu-attack-09kaddaikadu-attack-12kaddaikadu-attack-02kaddaikadu-attack-03

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux