அல்லைப்பிட்டி விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட புகையிலைச் செய்கை-இம்முறை அதிக விளைச்சலைத் தந்திருப்பதாக விவசாயி ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களை விட இம்முறை விவசாயிகளுக்கு புகையிலையினால் பெரும் லாபம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுவதுடன்.அல்லைப்பிட்டியில் பல காரணங்களினால் விவசாயம் செய்பவர்களின் தொகை குறைவடைந்து வருகின்ற நிலையில்-இந்த வருடம் புகையிலையின் அமோக விளைச்சலைத் தொடர்ந்து எதிர்காலத்தில் மேலும் பல விவசாயிகளை,விவசாயத்தில் ஈடுபடத்தூண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியில் புகையிலைக்கன்று நடுவதிலிருந்து,வெட்டி போறணையில் உலர்த்தும் வரை -அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
கீழே இணைக்கப்பட்டுள்ள இப்படங்கள் அனைத்தும்-இந்த வருடமே பதிவு செய்யப்பட்டவை,என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.