தீவகம் மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையோரமாக அமர்ந்திருந்து அருள்பாலித்து வரும் பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்ளூரிலும்,மற்றும் புலம் பெயர்ந்து பல நாடுகளிலும் வாழும் கண்ணகை அம்மனின் பக்தர்களின் நிதியுதவியுடனேயே -இப்புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மேலும் அறிய முடிகின்றது.
இந்த வருடம் நடைபெறவுள்ள,கண்ணகை அம்மனின் பொங்கல் திருவிழாவிற்கு முன்னர் இப்பணிகள் நிறைவடையவேண்டும் என்ற இலக்குடன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக மண்டைதீவு பொதுமகன் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.