அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையாருக்கு சுற்றுமதில்- அடிக்கல்  நாட்டப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையாருக்கு சுற்றுமதில்- அடிக்கல் நாட்டப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அழிவிலிருந்த சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தினை புனரமைத்து -மக்களின் வழிபாட்டிற்கு வழி செய்து கொடுப்பதற்காகவும்-பழைமையான ஆலயத்தினை அழிய விடாமல் பாதுகாப்பதற்காகவும்-அல்லைப்பிட்டி மக்களுடன் இணைந்து அல்லையூர் இணையம் மேற் கொண்ட விடாமுயற்சியின் பயனாக-தற்போது ஆலயப்புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்-ஆலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான நாட்கல்லும்-11-02-2015 புதன்கிழமை அன்று நாட்டப்பட்டுள்ளது.

பல இலட்சம் ரூபாக்கள் செலவில் ஆலயத்தின் சுற்றுமதிலினை அமைப்பதற்கு  -திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள் முன் வந்துள்ளதுடன்-அப்பணியினை உடனே ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதியினையும் அனுப்பி வைத்ததைத் தொடர்ந்தே நாட்கல் நாட்டப்பட்டுள்ளது.

திரு எஸ்.ஆர் அவர்கள் அறப்பணிக்கும்,ஆலயப்பணிகளுக்கும் தொடர்ந்து உதவிவருவதுடன்-ஊர் மக்களுக்கும் உதவிகளைச் செய்து வருபவர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தினால் இதுவரை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நம்மவர்களிடமிருந்து  ஒரு இலட்சத்து ஜம்பது ஆயிரம் ரூபாக்கள் திரட்டப்பட்டு-பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மூலம் ஆலய நிர்வாகத்தின் பொருளாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதற்கான பற்றுச்சீட்டுக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

வேண்டுகோள்

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் அல்லைப்பிட்டி மக்கள்-சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய புனரமைப்புக்கு உதவிட முன்வருமாறு அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 image-a4ea4ce8df16c3e2085d9b1ef933cc416963729554a888e1cf9b3cb8d514aab6-V image-5dea836d623e72f0145d846d084a02ed2160807ebcd5d86e907e3e56708a3bc0-V 1398887_868785856489198_1913648829904083001_oSAM_1462 (1) SAM_1463 SAM_1465 SAM_1466 (1) SAM_1466 (1) SAM_1468 (1) SAM_1469 (1) SAM_1478 image-e807d1b8bbfb1e3968466283ef2a57097f4b89829fa60910792d4122859a0567-V image-7de161f340c5570f4f9c6f9c05faa7108949848d1ce2fcfc673e41d6a1c5fe7e-V image-144f6a8f23bbfe5202da2d8dd5d00a96b56294f164eccce33f555f5aa880d055-V image-9acca93462c3e03cb43b97498931c1136677b2e1c6423694b08b9c571a698f9f-V image-7c6c18b90ef695f6cf3136533e4a0e9d6436ac0496f4cf8d1c9941c15cb36609-V image-9b5a49796a7ea070808742a678eb25f7cb5be47c85f27d7668da632533f03797-V image-41bd7f1c8eab4881a9bf4d56dadedb24136a01f553720e87296b0c3f6c852dd4-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux