யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த 06-02-2015 வெள்ளிக்கிழமை அன்று-அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலை அதிபர் கோ.பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற-விழாவிற்கு பிரதம விருந்தினராக,ஓய்வு பெற்ற வேலணை கோட்டக்கல்வி அதிகாரி கலந்து கொண்டதுடன்-மேலும் அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் -அல்லைப்பிட்டி பங்குத்தந்தை எம்.பத்திநாதர் -அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் அருட்சகோதரன் திரு மா.நவரட்ணராஜா-அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய தர்மகர்த்தா பெரியவர் நடேசபிள்ள-சமூக ஆர்வலர் திரு இராசப்பா கேதாரநாதன்-செல்வி கலைமதி செல்லத்துரை,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
