யாழ் தீவகத்தில் கோடைகாலத்தில் கடும் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்படும்-கிராமங்களில் ஒன்றான புங்குடுதீவில் கடந்த 28.01.2015 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சன்குமலாடி வீதியில் 500 நிழல் தரும் மரங்கள் நடுகை செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம சேவையாளர், பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மரநடுகையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக முறையில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு மரநடுகை விழாவாகவே நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.