அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க.த.க. வித்தியாலயத்தில் நடைபெற்ற,கால்கோள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க.த.க. வித்தியாலயத்தில் நடைபெற்ற,கால்கோள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க  வித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும்   கால்கோள் விழா நிகழ்வு 19.01.2015 செவ்வாய்க்கிழமை அதிபர் எம்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு அல்லைப்பிட்டி கிராம சேவையாளர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் மற்றும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தை பத்திநாதர்–சமூக ஆர்வலர் திரு இ.கேதாரநாதன்-வர்த்தகர் திரு ராஜன்சேதுபதி-வர்த்தகர் திரு.மகிந்தன் ஆகியோருடன் மாணவர்களின் பெற்றோர்களும்  பெருமளவில் கலந்து சிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள-புனித சஞ்யுவானியார் ஆலயத்தில்-பங்குத்தந்தை பத்திநாதர் அவர்களினால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின் மாணவர்கள் ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டதுடன்-பின்னர் பரிசுகளும் வழங்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 36 34 37 40 41 42 43 44 45 72 71 77 78 76 74 69 81 63 60 51 55 54 53 64 66

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux