குணப்படுத்த முடியாத நோயினால் துன்பப்படும் நோயாளி ஒருவரை சட்டபூர்வமாக கொன்றுவிடுதல் கருணைக்கொலை எனப்படுகிறது.
ஐரோப்பாவில் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பேர்க் போன்ற நாடுகளில் கருணைக்கொலை அல்லது மருத்துவரின் உதவியுடனான தற்கொலை போன்றவற்றிற்கு அனுமதி உள்ளது. பிரான்சிலும் இதை ஒத்த சட்டமூலமே கொண்டு வரப்படவுள்ளது.
பிரான்சிலும் கருணைக்கொலை செய்ய, அதற்காக நியமிக்கப்பட்ட 18 பேர் அடங்கிய ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2013 டிசம்பரில் இவ் ஆணைக்;குழு வெளியிட்ட அறிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பே பதிவு செய்யப்பட்டி ருக்கின்றது. அத்துடன் ஆணைக் குழுவின் கருத்து பிரான்ஸ் மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாதெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பிரெஞ்சு அரசு கோடை கால பாராளுமன்ற அமர்வின் போது கருணைக்கொலைக்கு சட்டவடிவு கொடுப்பதற்கான திட்ட வரைபு வேலைகளில் இறங்கியுள்ளது. பாராளுமன்றத்தினால் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டாலும் நீதிநெறிமுறை தவறாது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் தங்களுக்குள்ள ஆதங்கத்தை மக்கள்அமைப்புகள் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன.