புலம்பெயர்ந்து வாழும் அனலைதீவு மக்களின் நிதியுதவியுடன்,அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா,என்னும் அமைப்பினால் -அனலைதீவில் பலகோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வந்த,நவீன பிராந்திய வைத்தியசாலையின் திறப்பு விழா 22-01-2015 வியாழக்கிழமை காலை 10.மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய வைத்தியசாலையினை-வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் மருத்துவர்கள்,அரச அதிகாரிகள்,பொதுமக்கள்,என அதிகமானோர் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.