புனித பாப்பரசர் விஜயத்தால் ஆசீர்வாதம்பெற்று புதுப் பொலிவு பெறும் இலங்கை திருநாடு!சிறப்புக் கட்டுரை…

புனித பாப்பரசர் விஜயத்தால் ஆசீர்வாதம்பெற்று புதுப் பொலிவு பெறும் இலங்கை திருநாடு!சிறப்புக் கட்டுரை…

“மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்” புனிதரின் விஐயத்தின்போது இது ஒரு மகிழ்ச்சிமிக்க் தீர்க்க தரிசனம். இயேசு கிறிஸ்துவின் நற்செய்திப் போதனை உலகின் எல்லைகள் எல்லாவற் றையும் சென்றடைவதை இறைவாக்கினர் ஏசாயா முன்னறிவிக்கிறார். இந்தத் தீர்க்கதரிசன முன்னறிவிப்பின் ஊடாக ஒரு மேன்மையான நற்செய்தி இலங்கையிலும் பரப்பப்படுகிறது.

Pope-visit-1

மனிதம் புனிதமாகும். ஓர் உன்னத வைபவத்தில் முழு நாடும் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறது. மாற் றத்தின் யதார்த்தை இலங்கையர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் பரிசுத்த பாப்பரசரின் விஐயம் அதற்குப் புனித வரலாற்றைப் பதிவு செய்கிறது.

“இந்த பாறையின் மேல் என் திருச்சபையை கட்டு வேன்” என்ற இறை வாக்கிற்கமைய உலகெங்கும் கிறிஸ்து யேசு விட்டு சென்ற பணியை தொடர அவரது பிரதிநிதியாக சேiவாயற்ற தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் பாப்பரசர் பிரான்ஸிஸ்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை கத்தோலிக்க திருச்சபையின் 26 ஆவது திருத்தந்தை யாவார். வடஅமெரிக்கா நாடான ஆர்ஜன்டீனாவை சொந்த நாடாக கொண்ட பாப்பரசர் லத்தீன் அமெரிக்கா நாடு ஒன்றிலிருந்து இந்த புனித பதவிக்கு வந்த முதலா வது திருத்தந்தையாவார்.

2013 ஆம் ஆண்டு 26 ஆவது பாப்பரசாராக பதவியேற்ற திருத்தந்தை பிரேசில் மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

ஆசியா நாட்டிற்கான முதல் விஜயமும், முன்றாவது விஜயமும் இலங்கை திருநாடாகும்.; திருத்தந்தையின் வருகையால் இலங்கை வாழ் அணைத்தின மக்களும் புண்ணியவான்களாhவர்களாவார்கள் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் மறக்கவே முடியாது. இது பொன் எழுத்துக்காளால் எழுதப்பட வேண்டும்.

13ம்திகதி செவ்வாய்கிழமை காலை 9.00 மணியள வில் ஸ்ரீலங்கா வான்னுர்தி முலம் வந்திறங்கி பரிசுத்த பாப்பரசர் நம் தாய் திருநாட்டின் காலடி வைத்ததும், மக் கள் எல்லோரினதும் முகம் மலர விமான நிலையத்தில் கையசைத்தது வரவேற்றர்கள்.

இலங்கை திருநாட்டின் தேசிய கீதம் ஒலிக்க, முப்படைகளின் 21 வீரவேட்டுக்கள் முழங்க மாணவர்களால் கிறிஸ்தவ கீதம் இசைக்க செங்கம்பளத்தில் பரிசுத்த பாப்பரசரை எமது தாய் திருநாட்டின் மேன்மை தாங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்பதிகள் அவர்களுடன் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் பாப்பரசரை இன் முகத்ததுடன் வரவேற்று, விசேட அதிதிகள் மேடைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர்.

இ;ந்த வைபவத்தில் பிரதமர்; ரணில் விக்கரமசிங்க தம்பதிகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநா யக்கா உட்பட புதிய அமைச்சரவையின் புதிய அமைச் சர்களும், செயலாளர்களும், சமயத் தலைவர்களும், பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

அங்கு உரையாற்றிய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன திருத்தந்தை அவர்களே உங்களது ஆசிய அப்போஸ்தலிக்க விஜயம் எமக்கு கௌரவத்தையும், மகிழ்ச்சியையும் தருகின்றது.

எனது அரசு மற்றும் மக்கள் சார்பில் பெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பத்திலே இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் இந்த விஜயத்தில் உங்களை வரவேற்பதில் எனது, அரசும்,மக்களும் எல் லையற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.

உங்களது இலங்கை விஜயம் என்னைப் பொறுத் தமட்டில் அதி உன்னதமானதோர் விஜயமாக கருதுகின் றேன். எனது நாட்டு மக்கள் ஜனாதிபதியாக என்னை தேர்ந்தெடுத்து ஒரு சில நாட்கள் நிறைவு செய்வதற்கு முன்பதாக உங்களின் ஆசீhவாதம் கிடைப்பது நான் பெற்ற பெரும் பாக்கியமாகவே கருதகின்றேன்.

தந்தை அவர்களே உங்கள் காலடி பதிந்த இத்தரு ணத்தில் நான் முக்கிய விடயமாக கருதுவது எனது அரசு கலந்துரையாடல் மற்றும் ஒப்புரவு மக்கள் மத்தியில் நிலைகொள்ள சந்தர்ப்பம் அளி த்து அமைதியனை, சமாதானத் தினை அனைத்து மக்களும் அனுபவிக்க செய்றபட முயற்சி யெடுப்பதாலாகும் எமது பல்லா யிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆன்மீகம், கலாசாரம், சமூக ஒருமிப்பு மற் றும் ஒப்புரவு தொடர்பில் நம் பிக்கை கொண்ட மக்களாக வாழ்ந்து வருகின்றோம். திருந் தந்தையே உங்களது உன்னத பங்களிப்பு சமாதானம் மற்றும் றல்லிணக்கம் எமது மக்கள் மத் தியிலும், உலக மக்கள்; மத்தி யிலும் ஏற்படுவதற்கு உறுது ணையாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும் எமது நாட்டின் எல்லா செயற்பாடுக ளுக்கும் ஊக்கம் அளிக்கின் றது.

20 வருடங்களுக்கு முன்னர் திருத்தந்தை 2ம் அரு ளப்பர் சின்னப்பர் எமது திருநாட்டிற்கு வருகை தந்தி ருந்தார். அக்கால கட்டத்தில் எமது நாடு பயங்கரவாத பிடியில் சிக்கி அல்லோகல்லோலப்பட்டு தவித்துக் கொண் டிருந்தது. அன்றாட வாழ்வில் தேவைகளை கூட செய்ய முடியாததொரு காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டி ருந்தோம். திருதநந்தையே உங்களின் காலடி பதித்த இத்தருணத்தில் சமாதானம், நல்லிணக்கம் கட்டியெழுப்பு வதற்கு தந்தையின் விஜயம் துணைபுரிவதுடன் நாட்டின் அனைத்து திசைகளுக்கும் அதன் நன்மைகள் சென்ற டையவும், மக்கள அதனை அனுபவித்து மனித மாண் புடன் வாழ கூடிய சூழல் எமது மக்களுக்கு கிட்டியு ள்ளது. வறுமை கோட்டியிலிருந்து மக்களை மீட்டெடுக்க துணைபுரிந்துள்ளதென கூறுவதில் எந்தவித ஜயமு மில்லை. ஏழ்மையை ஒழிப்பதற்காக எமது அரசாங்கம் முன்னுரிமையுடன் செயற்படுவதாகவும், ஏழைகள் மத்தியில் காணப்படும் பெருளாதார வேற்றுமைகளையும், உயர்வு, தாழ்வு மனப்பான்மையும் இல்லாதொழிக்கவும், பொருளாதார வேற்றுமையைகளை குறைப்பதற்கும் திடசங்கர்ப்பம் கொண்டிருக்கிறோம்.

இருநாடுகளும் உலகில் முக்கிய சமயங்களான கிறிஸ்தவம் மற்றும் பௌத்த சமயத்தைக் கட்டிக் காப்பதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டி ருக்கின்றன. வேதாகமத்தில் இறைமகன் கிறிஸ்து “பகைவரை நேசியுங்கள் துன்பப்படுபவர்களுக்காக செபி யுங்கள்” (மத.5.44) என்று கூறினார். அதேபோல புத்த பெருமான் தனது போதனையில் கோபம் கோபத்தினால் தணியாது இருப்பினும் கோபத்தை அன்பினால் தணிய வைக்க முடியும். தீமையை நன்மையின் மூலமே கட்டுப்படுத்த முடியுமென தெரிவித்தார். இவ்வாறான முடிவில்லாத போதனைகள் கிறிஸ்தவ மற்றும் பௌத்த விமுமியங்களாக பகிர்ந்து கொள்ளும் எனது நாட்டு மக்கள் கடைப்பிடிக்கும் சமயங்களே. அவை பல்சமய உரையாடலுக்கும் சமூக ஒற்றுமை மற்றும் ஐக்கியத் துக்கும் விசேடமான பங்களிப்பை நல்குகின்றன. அதையே கடந்த வார உலக சமாதான தின செய்தியில் நீங்கள் முன்வைத்துள்ளீர்கள்.

எமது இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பில் உங்க ளது விஐயம் பயன்தரக்கூடியதும், நினைவில் நிலைத்து நிறுத்தக் கூடியதுமாக அமைந்துள்ளது. இருநாடுக ளுக்கான இராஜதந்திர உறவுகள் மேலும் பலப்படவும் அதற்கான கலந்துரையாடல்களையும், உறவையும் நாடி எதிர்காலத்தில் செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதி தெரிவிதார்.

உங்களுடைய முழுமையான பெரும் ஆசீரும், வழிகாட்டல்களும் இலங்கை நாட்டு மகக்ளுக்கும், வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கு மாறு தாழ்மையுடன் வேண்டி, எமது நாட்டின் அமைதி, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சுபீட்சம் வேண்டி இறைவனிடம் தாழ்மையுடன் வேண்டுகி;றேன் என ஜனாதிபதி தமதுரையில் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திருதந்தை பிரான்சிஸ் உரையாற்றுகையில்,இலங்கையின் எழில்மிகு இயற்கைச் சுழல் இந்து சமுத்திரன் முத்து என அழைக்கப்படுகின்றது. அதையும் தாண்டி முக்கிய மான விடயம் இலங்கை வாழ் மக்களின் விருந்தோம்பல் தன்மை மற்றும் பலதரப்பட்ட கலாசார, சமூக சமய சம்பிரதாயங்களை கொண்டிருப்பதன் மூலம் மிகவும் பிரபல்யம் அடைந்த நாடாக திகழ்கின்றதையிட்டு பெருமையடைகின்றேன்.

எனது இலங்கை விஜயம் அப்போஸ்தலிக்க மேய்ப்புப்ப ணிசார் பயணமாக அமைந்திருக்கின்றது. கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய ஆயர் என்ற ரீதியில் இத்திருநாட்டின் கத்தோலிக்க மக்களை சந்திப்பதற்கும் அவர்களை ஊக்கப்படுத்தவதற்கும், இணைந்து செபிக் கவும் நான் என்றுமே உங்களுடன் இணைந்திருப்பேன் என பாப்பரசர் தெரிவித்தார்.

உலகில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் இடை யில் போட்டி, பொறாமை, ஒருவருக்கு எதிராக மற்றவர் போர்புரிவது கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையின் பல வருடங்களாக நடந்த உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பல அப்பாவி உயிர்களும் காவுக்கொள்ளப்பட்டது. மற்றுமில்லாத உடமைகளையும், உறவுகளையும் இழந்து பல தொல்லைகளுக்கும், இன்னல்களுக்கும் முகம் கொடுத்து துன்பப்பட்ட மக்கள் தற்போது ஒரளவு நிம்மதியுடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது தொடர்ந்து நிலைத்திருக்க இறைவனின் அருளை வேண்டி பிராhத்திக்கின்றேன்.

“தீமையை நன்மையால் மேற்கொள்ள வேண்டும். என்ற இறை வார்த்தைக்கு அமைய இலங்கை திரு நாட்டில் என்றுமே சுபீட்சம் மற்றும் சமூக ஒற்றுமை, நல் லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி மக்கள் என்றுமே அமைதியுடன், இன்பமுடனும் வாழ இறைவன்” அருன் புரிவாராக!

நல்லிணக்கம், சமாதானம் இவற்றின் ஊடாக பகை மையை வெற்றிக்கொண்ட கசப்பான நிகழ்வுகள மறந்து வாழ்வில் நல்லிணக்கம், ஒற்றுமை, சமாதானம் ஆகிய சிறந்த பண்புகள் ஊடாக இலங்கை திருநாட்டை கட்டிக் காப்போம்.

இலங்கையின் அரசியல் கலாச்சார மற்றும் சமய தலைவர்கள் தமது அனைத்து முக்கியமான கடமைகளையும்,செயற்பாடுகளையும் உற்றுநோக்குவதன் மூலம் பெறப்படும் நன்மை மற்றும் ஆற்றுப்படுதலின் ஊடாக இலங்கை வாழ் மக்களின் உலக மற்றும் ஆன்மீக வாழ்வு மட்டில் வளர்ச்சி நோக்கிய திடமான பங்க ளிப்பை பெற்றுக்கொடுப்பார்கள் என உறுதியுடன் எதிர்பார்க்கின்றேன்.

மனித உரிமைகளை மதித்து அனைத்தின மக்களும் சமூகத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் முக்கியமாக அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதும்,கட்டமாணப் பணிகளை நிவர்த்தி செய்வதும் மாத்திரமலல மனித மாண்பு, மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி அளைவரது அபிலாசைகiளும் பூர்த்தியாகும் முறையில் செயல்படுவது மிக மிக அவசி யமாகும்.

காயங்களை ஆற்றும் செயற்பாட்டின்போது உண் மையை நோக்கிய பயணத்தில் ஈடுபடவேண்டும். இது பழைய காயங்களை திரும்பவும் திறப்பதற்காக அல்ல மாறாக நீதியை ஆற்றுப்படுத்தலை ஒற்றுமையை வளர்த்தெடுக்க இது மிகவும் முக்கியமாகிறது.

இந்து சமுத்தழிரத்தின் முத்தாகி இலங்கை தேசத்திற்கு இறையாசி கிட்டவேண்டும். மக்கள அனைவரும் அமைதி யும், சபீட்சம் நிறைந்த வாழ்வை பெறுவதின் ஊடாக அதன் ஒளி எங்கும் பரவ நான் அனுதினமும் இறைவனை வேண்டுகிறேன.;

இலங்கை ஜனாதிபதிக்கும், மக்களுக்கும். பாப்பரசர் தனக்கு அளிக்கப்பட்ட அதி உன்னத வரவேற்புக்கு தனது நன்றியை தெரிவித்ததுடன் இலங்கை மக்களாகிய உங்களுடன் இணைந்துகளித்த இந்நாட்கள் சகோ தரத்துவத்திலும், கலந்துரையாடலிலும் ஒப்புறவிலினதும் பகிர்தலினதும் நாட்களாக இருந்தமைக்கு உளமாற வாழ்த்துக்களையும்,, நன்றிகளையும் திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

உயர்வான உன்னத மாமனிதராக மதிக்கப்பட்டவர் திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் விசேட அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

திருந்தந்தை மக்களோடு மக்களாக தன்னை அடையாளப்படுத்தும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பை நோக்கி வரும்போது பெருந்திரளான மக்கள் இரும ருங்கிலும் நின்று தந்தை வரவேற்றர்கள். அவர் கைகளை அசைத்து வண்ணம் குழந்தைகளின் தலையில் கைகளை வைத்து ஆசீர்வாதம் அளித்தப்படியே திறந்த வானுர்தியில் வந்து கொண்டிருந்தார். இடையில் இறங்கி மக்களோடு உரையாடினார்.

எத்தனையோ மக்களின் மனங்களில் இடம் பிடித்த மாமனிதர். தனது கைப்பையை கூட யாரிடமும் கொடுக்காது தானே எடுத்துச் சென்றார். இத்தகைய பண்பு எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. ஒவ்வொரு உயர் பதவியில் உள்ளவர்களை சிந்திக்க வைத்தது.

1970ம் ஆண்டு மார்;கழி மாதம் 4ம்திகதி பாப்பரசர் 6ம் சின்னப்பார் இலங்கைக்கு முதலாவதாக விஜயம் செய் தார். இரண்டாவதாக 1995ம் ஆண்டு தை மாதம் 16ம் திகதி பாப்பரசர் 2ம் அருளப்பர் சின்னபப்ர் விஜயம் செய்தார். யோசப் வாஸ் அடிகளாரை அருளாளர் நிலை க்கு உயர்த்தியவர் 2ம் அருளப்பர் சின்னப்பராவார். 20 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கு வந்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி 15ம் திகதி காலை 9.00 மணி யளவில் பிலிப்பைன்ஸ் நோக்கி தமது இறை பயணத்தை ஆரம்பித்தார்.

உறவுகளுக்கிடையேயான அசைக்க முடியாத நம்பிக் கையை மையமாக வைத்து திருதந்தை அவர்கள் 180 புத்தகங்களை எழுதியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல் பாப்பரசர் 6ம் சின்னப் பரை வரவேற்ற பெருமை இலங்கை திருநாட்டின் முதற் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார். 2ம் அருளப்பர். சின்னப்பர வரவேற்ற பெருமை முதற் பெண் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்காவையே சாரும்.

3ஆவதாக இலங்கைக்கு வந்த பாப்பரசர் பிரான்ஸிஸையும் வரவேற்ற பெருமையும் அவ ருக்கேயுண்டு.

பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன் னிட்டு, அவரை கௌரவிக்கும் முகமாக இல ங்கை மத்திய வங்கியால் கடந்த செவ்வாய் கிழமை 14ம்திகதி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே னாவை சந்தித்த வேளையில் ஜனாதிபதியால் 500 ரூபா வெள்ளிநாணயம் பாப்பரசருக்கு வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்தில் தபால் தலையும் வெளியிட்டு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித பூமியான மருதமடு திருத்தலத்திற்கு சென்ற பரிசுத்த தந்தையை அன்போடு வரவேற்ற மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போது இலங் கையின் நீண்ட கால யுத்தத்திலிருந்து விடுத லைபெற்று நல்ல இலக்கை நோக்கிய உங் களின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும். இறைவனின் ஆசீhவாதம் என்றென் றும் உங்களுடன் இருக்கும்.

தீமைகளை மறந்து மன்னித்து நல்லிணக் கத்தையும், அன்பையும் ஏற்படுத்துங்கள் என அங்குள்ள மக்களுக்கு பாப்பரசர் அறைகூவல் விடுத்தார். இழந்த உறவுகளின் வேதனையிலி ருந்து தலைதூக்கி சமாதானத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.அதனை நோக்கி செல்லுங்கள். நன்மையை நினைத்த சகல தீமையான எண் ணங்களை மறந்து வாழுங்கள். சிலுவையின் அடையாளத்தை பார்க்கும் ஒவ்வொரு கண மும் தீமைகள் மறந்து விடுமென புறாக்களை பறக்கவிட்டு அதனை தெரிவித்தார்.

மடு அன்னையின் இல்லத்தில் உங்களுடன் சேர்ந்திருப்பதை நான் பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். அனைத்தின மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்ட அன்னை எல்லோ ருக்கும் உதவி செய்வார் என தெரிவித்த பாப்பரசர் ஒவ்வொருவர் மத்தியில் உண் மையான விசுவாசம், பச்சதாபம், மன்னிப்பு வழங்குதல், மன்னிப்பு கேட்டல் ஆகியவற் றினை நடைமுறைப்படுத்த முடியும். சமாதா னத்தையும், மன்னிப்பையும் பெற்றுக்கொள்வ தற்கான இச்சந்தர்ப்பதில் அன்னை எமக்கு துணை நின்று இழந்த ஒற்றுமையை கட்டியெழுப்ப வழிகாட்டுவாராக.

கடந்த காலங்களில் ஏறபட்ட துன்பம் நிறைந்த வடுக்களை எவராலும் மறக்க முடி யாது. அவ்துன்ப அலைகளை கடந்து நம் வாழ்வில் சமாதானம் என்னும் நறுமணம் வீசட்டும் எப்போதுமே தாய் உங்களுக்கு துணை புரிவாராக! ஓவ்வொரு குடும்பங் களிலும், இல்லங்களிலும் அன்னை வீற்றி ருந்து உங்கள் அனைவரையும் ஆசிர்வ திப்பார்., இறைவனின் வல்லமையால் மாத்தி ரமே வடுக்களை குணப்படுத்தி அவ்வடுக் களுக்கு மருந்தாக அவர் செயற்படுவார். உடைந்த. நொறுக்குண்ட உள்ளங்களுக்கு அறுதல் அளிப்பவரும் இறைவனே அவரே உங்களை காத்து வழிநடத்துவாராக. இலங் கையில் சிங்கள,தமிழ் பேசும் மக்கள் அனைவரும் மரியன்னையுடன் இணைந்து அழிந்து போன உறவையும், ஒற்றுமையையும் இத்த ருணத்தில் கட்டியெழுப்ப உறுதியுடன் செயற்ப டுவோம் என மனம்திறந்து மன்றாடுங்கள் என பாப்பரசர் தெரிவித்தார்.

மருதமடு அன்னையின் பரிந்துபேசுதல் மூலமாக இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒப்புரவுடன், நீதி, சமாதானம் நிரம்பிய நல்ல எதிர்கால சுபீட்சமான எதிhகால வளமான அன்பு நிறைந்த வாழ்க்கை இத்திரு நாட்டில் வாழும் அனைத்தின மக்களுக்கும் குழந்தை களுக்கும் உரித்தாகட்டும் என்று பாப்பரசர் தெரிவித்தார்.

ஆயர் ஜோசப் ஆண்டகை அன்னையின் உருவசிலை ஒன்றை தந்தைக்கு பரிசாக அளித்தார்.

பாப்பரசரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்’ தம்பதிகள், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தம்பதிகள் 14ம் திகதி மாலை அப்போஸ்தலிக்க தூதுவர் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து ஆசீர் பெற் றனர்.

14ம்திகதி பாப்பரசர் மாலை மகாபோதிக்கு விஜயம் செய்து பானகல உபதிஸ்ஸ தேரரையும் சந்தித்து கலந்துரையாடினார். என்பது விசேட அம்சங்களாகும்.

விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் போலவலான நிலையத்திற்கு சென்ற பரிசுத்த பாப்பரசர் 2ஆம் அருளப்பர் சின்னபப்ரின் நூதனசாலை திரைநீக்கம் செய்து வைத்தார்.

ஜனாதிபதி பாப்பசரசருக்கு நினைவு சின்னம் வழங்கினார்.

15ம்திகதி காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து பாப்பரசரை வழியனுப்பி வைத்தார்கள்.

பாப்பரசரின் தடம் பதிந்த இம்மண் ஒற் றுமை, சாந்தி, சமாதானம் நிலைத்து நல் லாட்சிக்கு வழிவகுக்கட்டும்!

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் திருத்தந்தை பிரான் ஸிஸ் இலங்கையின் வாழ்க்கையோடு இரண் டறக் கலந்த நான்கு பெரும் சமயங்களான பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரின் சர்வமத தலைவர்களை சந்திதப்போது உங்களின் பிரசன்னத் திற்கும், வரவேற்றுப்பிற்கும் எனது நன்றிகள். பிரார்த்தனைகளை ஒப்புக்கொடுத்து, ஆசீரையும் அளித்த அனைவருக்கும் விசேடமாக ஆயர் கிளிட்டஸ் சந்திரசிறி பெரேரா ஆண்ட கைக்கும், வணக்கத்துக்குரிய விஜpதசிறிகொட தேரருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் போல கத்தோலிக்க திருச்சபை ஏனைய மதங்கள் பால் அதன் அழமான மதிப்பை எடுத்து ரைக்கிறது. திருச்சபையானது இம் மறைகளிலுள்ள உண்மையானதும், தூய்மையானதுமானவற்றை ஒருபோதும் ஒதுக்குவதில்லை. மாறாக

அவற்றின் வாழ்வு, பழக்கம், படிப்பினைகள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றி உயர்ந்த மதிப்புக் கொண்டிருக்கிறது. ஆகவே நானும் உங்கள் மீதும், உங்களது பாரம்பரியங்கள் மற்றும் நம்பிக்கைகள் மீதுமான திருச்ச பையின் உண்மையான மரியாதையை மீள் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

கத்தோலிக்க சமூகத்தை தரிசிக்க கிடை த்தது ஒரு விசேட ஆசீரே ஆகும்.கிறிஸ்தவ விசுவாசத்தை பலப்படுத்தி, nஜபிக்கவும் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் பகிர்ந்து கொ ள்ளவே இலங்கை நாட்டிற்கு வந்துள்ளேன்.

உண்மை,மற்றும் தூய்மையை நோக்கிய பயணத்தில் எம்மோடு இணைந்துள்ள இப்பா ரிய சமய பாரம்பரியங்களைக் கொண்ட உங் களோடு சேர்ந்திருப்பதும் அதே போன்றதொரு ஆசீர்வாதமேயாகும் என்று தெரிவித்த பாப்பரசர் மேலும் யாராகிலும் வன்முறையை உருவாக்க எத்தனிக்கும் போது அவர்களை ஆணித்தரமான முறையில் கண்டித்து எமது சமய விழுமியங்கள் படி அமைதியுடன் சமூக வாழ்வு வாழ அவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

அன்புக்குரிய என்னிய நண்பர்களே பெருந் தன்மையோடு என்னை வரவேற்று என்னோடு இந்நேரத்தை கழித்தற்காக நான் ரொம்பவும் மகிழ்சிசயடைகின்றேன. மீண்டும் மீண்டும் நள்றி தெரிவிக்கின்றேன். எமது இந்த சகோதர சந்திப்பு ஐக்கியமாய் வாழவும், சமாதான ஆசீரை எங்கும் பரப்பவும் நாம் மேற்கொள் ளும் ஒவ்வொரு முயற்சிகளையும் பலப்ப டுத்துவதாக தெரிவித்தார்.

நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர தம்பி ரான் பாப்பரசருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

காலி முகத்திடலில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் இலங்கை முழுவதிலிருந்து சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் குமுமியிருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

காலி முகத்திடலுக்கு காலை 8.00 மணிய வில் வருகை தந்த பாப்பரசரை கண்டதும் மக்கள் ஆராவாரம் செய்தனர். திறந்த விசேட ஊர்தியில் மக்களின் அருகாமையில் சென்று, சிறுவர்களை தன் கரத்தால் தொட்டு, அங்கு குழுமியிருந்த மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதுடன், 500க்கு மேற்பட்ட அங்கவீன நோயாளிகளையும் ஆசீர்வதித்தார்.

விசேடமாக அமைக்கப்டட மிகப்பிரமாண் டமான மேடைக்கு ஆயர்கள் மற்றும் மத குருமார்களால் பாப்பரசர் அழைத்து வரப்பட்டு 8.30 மணியளவில் விசேட திருப்பலி ஆரா தனை ஆரம்பமாகி 10.30 மணியளவில் பாப்பரசரின் விசேட ஆசியுரையுடன் இனிதே நிறைவுற்றது.

இவ்வைபவத்திற்கு அமைச்சர்கள், பாராளுமனற் உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், கத்தோலிக்க அமைப்புக்களின் தலைவர்கள், கலந்து கொண்டார்கள்.

காலி முகத்திடலில் பாப்பரசரால் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்ட ஜோசப் வாஸ் அடிகளார் 21 ஏப்பிரல் 1651 கிறிஸ்ரோப்பர் வாஸ் மரிய தெ மிரண்டா என்னும் கொங்கேணி மொழி பேசும் பிரமாணப் பெற்றோருக்கு 3ஆவது குழந்தையாக இந்திய மானிலமான கோவாவிலுள்ள பெனோலில் என்னுமிடத்தில் பிறந்து வளர்ந்த ஜோசப் வாஸ் அடிகளார் மறையை பரப்புவதற்கு இலங்கை திரு நாட்டிற்கு வந்து மாற்றுடை அணிந்து சாதா ரண மனிதனாக நடமாடி, நாட்டின் பல இடங்களிலும் சென்று இறைவாக்கை மக்க ளுக்கு எடுத்துரைத்தவர். கண்டி மன்னன் விமலதர்ம சூரியனால் வாஸ் அடிகாளார் சிறைப்படுத்தப்பட்டவர் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்த புனித நிகழ்வில் கலந்து கொள்ள கோவாவிலிருந்து 200க்கு மேற்பட்ட குருக் கள். ஜோசப் வாஸ் மன்றங்களின் பிரதி நிதிகள் வந்திருந்தார்கள்.

புனித அந்தஸ்து பெற்ற இலங்கையின் முதலாவது புனிதர் இவரே என்பது குறிப் பிடத்தக்க விசேட அம்சமாகும்

புனித பட்டம் சூட்டியபின்னா அங்கு உரை யாற்றிய பாப்பரசர் ஏசாயா தீர்க்கதரிசி சொ ன்ன “மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.” நான் கேட்ட புகழ்ச்சி மிக்க தீர்க்கதரிசனமாகும்.

முத்திப்பேறு பெற்ற யோசேப் வாஸ் அடி களை புனிதர் நிலைக்கு உயர்த்தி இன, மத வேற்றுமைகளை மறந்து கிறிஸ்தவ கருணை மற்றும் அன்பை அனைவரோடு பகிர்ந்து மனித மாண்பை மதிக்கும் வழிமுறை தொடர் பாக அவர் எமக்களித்த வழிகாட்டல் எமக்கு என்றுமே உறுதுணை புரிகின்றது.

இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி உலகின் எல்லைகள் எல்லாவற்றையும் சென்றடைவதை இறைவாக்கினர் ஏசாயா முன்னறிவித்திருந்தார். தீர்க்க தரிசன முன்னறிவிப்பானது மிகவும் மேன்மையான நற்செய்தியின் மறைப்பரப்பா ளரான ஜோசப் வாஸ் அடிகளாரை புனித நிலைக்கு உயர்த்தும ஒரு சிறப்பான அர்த் தத்தை இச் நற்செய்தி இந்நன்னாளில் தந் துள்ளது. 50 ஆவது வயதில் இறைபதம் அடைந்த இவர் புனிதர் நிலைக்கு உயர்;;த்தப்படுவது தகுதியானதே.

புனித யோசப்வாஸ் அவர்கள் இலங்கை மக்களுக்கான நன்மைதனமும் அன்பும் நிறைந்த அதிசக்தி மிகக் அடையாளத்தைக் காண்கிறோமென பரிசுத்த பாப்பரசர் மேலும் தெரிவிதார். ஓரற்ரோரியன் சபை சேர்ந்த இவர் இலங்கை மக்கள் மேல் கொண்ட அன்பால் தூண்டப்பட்டு இறைவாக்கை பரப்ப வந்த இவர் இன்று புனிதராகப்பட்டார்.

அவர் ஒரு முன்மாதிரியான குருவாகவும், அமைதி நோக்கிய பணியில் சமயப் பிரிவி னைகளை தாண்டிச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்தி நின்றார். மறைபரப்பு ஆவல் என்பதன் முன்னூதராணமாகத் திகழ்ந்தவர்.

என தெரிவித்த பாப்பரசர் அவரின் வழியை பின்பற்றி, விசுவாசத்தில் உறுதிபெற்று. இலங்கையில் அமைதிக்கும், நீதிக்கும், ஒப்ப புரவிற்கும் பாரிய பங்களிப்பை வழங்குபவர்களாக மாற வேண்டும் என ஆசிக்கின்றேன் உங்களிடம் இறைவன் எதிர்பார்ப்பது இதைத்தான். புனித ஜோசவ் வாஸ் அடிகளாரின் கரங்களில் உங்கள் அனைவரையும் ஒப்புவிக்கிறேன். இறைவன் உன்னதர் எல்லா புகழும் அவருக்கே உகந்து என கூறினார் பரிசுத்த தந்தை.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux