வேலணையில் கல்வித்தாயின் சிலை விஷமிகளால் உடைப்பு-பொலிசார் தீவிர விசாரணை-படங்கள் இணைப்பு!

வேலணையில் கல்வித்தாயின் சிலை விஷமிகளால் உடைப்பு-பொலிசார் தீவிர விசாரணை-படங்கள் இணைப்பு!

 

யாழ் தீவகம் வேலணை  மத்திய கல்லூரில் அமைக்கப்பட்டிருந்த,சரஸ்வதி சிலை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. தீவகத்தில் தலைசிறந்த கல்விமான்களை உருவாக்கிய,உருவாக்கி வரும்  வேலணை மத்திய கல்லூரி-கடந்த யுத்த காலத்தில் பல சிரமங்களைச் சந்தித்திருந்த போதிலும்-மீண்டும் வழமைக்குத் திரும்பி சிறந்த கல்வியினை தீவக மாணவர்களுக்கு வழங்கி  வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

10350330_816029341777080_6726927807844894785_n

இப்படி பல சிறப்பு க்களை பெற்ற-வேலணை மத்திய கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த சரஸ்வதியின் சிலையே-விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாகவும்-உடைத்தவர்களை கண்டுபிடிக்க,ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

10690251_816029531777061_2461171786196516521_n 10353557_816029441777070_2052410148736608682_n 10868235_816029705110377_6777911512065666578_n 1513772_816029835110364_4040313881165460563_n 10922748_816029585110389_1875679954732568429_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux