கமல்ஹாஸன் நடித்த உத்தம வில்லன் படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்–2, உத்தமவில்லன், பாபநாசம் ஆகிய படங்கள் வரிசையாக உள்ளன. இதில் எந்த படம் முதலில் வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அனைத்து படங்களிலும் கமல்ஹாசன் நடித்து முடித்து.படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இவை ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன
இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘உத்தம வில்லன்’. இதில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்
உத்தமவில்லன் தான் முதலில் வர இருக்கிறது என கமலே தெரிவித்து இருந்தார்.
உத்தம வில்லன் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தின் டிரைலர் குறித்த செய்திகளை ஏற்கனவே கமல்ஹாசன் வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டு உள்ளார்.அந்த வீடியோ காட்சியில் அவர் படம் நன்றாக வந்து உள்ளது படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக கூறி இருந்தார்.
‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில், ‘உத்தமன்’ என்ற 8-ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்.
மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் குருவான சினிமா இயக்குனராக கே. பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குனர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள்.
8-ம் நூற்றாண்டில் நடக்கும் ‘உத்தம வில்லனில்’ நடக்கும் கதையில் மன நோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21-ம் நூற்றாண்டு மனோரஞ்சனின் ரகசியக் காதலியாக ஆன்ட்ரியாவும் நடிக்கின்றனர்.
முத்தரசன் என்ற 8-ம் நூற்றாண்டு கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசர், ஜேக்கப் சக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராம், இவரின் வளர்ப்பு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி மேனன், சொக்கு செட்டியார் என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.