அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னை ஆலயத்தில்-கடந்த 31-12-2014 நள்ளிரவு 12 மணிக்கு -புத்தாண்டை வரவேற்கும் முகமாக விஷேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இத்திருப்பலிப்பூஜையில் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள மூன்று ஆலயங்களைச் சேர்ந்த,பங்கு மக்களும் பெருமளவில் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து-ஆலயத்திற்குச் சென்று நிழற்படங்களை பதிவு செய்து அனுப்பி வைத்த-எமது செய்தியாளருக்கு இத்தருணத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.