மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி திருநாவுக்கரசு இராசம்மா அவர்களின் இறுதி நிகழ்வுகள்-31-12-2014 புதன்கிழமை அன்று பரிஸில் நடைபெற்றது-அன்னாரின் புதல்வர் திரு எஸ் ஜெயக்குமார் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா திருநாவுக்கரசு அவர்கள் 27-12-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஏரம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஏரம்பு திருநாவுக்கரசு(மண்டைதீவு) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ராஜ்குமார், ஜெயக்குமார்(பிரான்ஸ்), ஜெயமலர்(இத்தாலி), சித்தியகுமார்(லண்டன்), விஜயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, அன்னம்மா, கணவதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சியாமினி(பிரான்ஸ்), சுதர்சன்(இத்தாலி), யசோதரா(லண்டன்), கவிதா(பிரான்ஸ்), பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கார்த்திகேசு, தையல்நாயகி, சோதிலிங்கம், சிதம்பரநாதன், மற்றும் தவமணி, சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், செல்வரெட்னம் ஆகியோரின் சிறிய தாயாரும், ஜிந்துஷன், திலக்ஷன்(பிரான்ஸ்), வைதீகன்(இத்தாலி), பிரியங்கன், சிநேகா(லண்டன்), திவ்வியா, சந்தியா(பிரான்ஸ்), கார்த்திகா(லண்டன்), ஜெனார்த்தன்(இலங்கை), நிர்த்திகா(லண்டன்), துர்க்கா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
||||||||||||||||||
தகவல் | ||||||||||||||||||
குடும்பத்தினர்தொடர்புகளுக்கு
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்! |