யாழ் தீவகத்தில் ஆச்சரியத்தையும், அதீத பக்தியையும், ஏற்படுத்திய ஜயப்ப பக்தர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் ஆச்சரியத்தையும், அதீத பக்தியையும், ஏற்படுத்திய ஜயப்ப பக்தர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையி்ன் புனிதபூமி என அழைக்கப்படும்-நயினாதீவு  மலையில் புலம் ஸ்ரீ 18ம் படி சபரி ஐயப்பன் ஆலயத்தில் 40 நாட்கள் ஐயப்பவிரத மண்டல பூஜைகள் சிறப்பாக நடைபெற்றதுடன் – 27-12-2014 அன்று இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து -நயினாதீவில் அமைந்துள்ள ஜயப்பன் ஆலயத்தினை நோக்கி -இருமுடி ஏந்தி ,குருவடி தேடி, ஐயப்பனின் 18ம் படி ஏறி வந்து- தங்கள் நேர்த்திக்கடன்களை  ஜயப்ப  பக்தர்கள் நிறைவு செய்தனர் .

படங்கள்உதவி -நயினை முகநூல் நண்பர்கள்

ஐயப்பன் விரத விதிமுறைகள்.

1-முதன் முறை மாலை அணியும் பக்தர் கன்னி ஸ்வாமி என அழைப்பார்கள்.2-ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும்,பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை குருஸ்வாமியாய் ஏற்று தாய்,தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும்.

‎3.அவரவர் வசதிக்கேற்ப குருவிற்கு தட்சணை கொடுத்து குருவின் அனுக்கிரகத்தை பெறல் வேண்டும். கொடுக்கும் தட்சணை ஒரு ரூபாயனாலும் குரு யப்பனே தந்ததாக அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4.கார்த்திகை 1ம் தேதி மாலையணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும். காலை உணவை விடுத்து மதியஉணவை ஜயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ணவேண்டும். மாலை பால்,பழம்,பலகாரம் உண்ணலாம்.

5.விரதகாலத்தில் மிக இறுக்கமாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கவேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. திருமணமானவர்கள் குடும்ப வாழ்வில் (இந்த நாட்களில் ஈடுபடக்கூடாது). மனதால் ஜயப்பனை மட்டும் நினைத்து அவன் பாதம் சரணடைய வேண்டும்.

6.உருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி,அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.

7.விரதகாலத்தில் கறுப்பு,நீலம்,பச்சை நிறமுள்ள ஆடைகளை அணியவேண்டும்.கன்னி ஸ்வாமிகள் கறுப்பு மட்டும்தான் அணியலாம்.

8.காலை,மாலை குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஐயப்பனிற்கு துளசி,பால்,பழம்,கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபடவேண்டும்.

9.விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது.காலணி,குடை,மழைக்கு போடும் கவசம் என்பவற்றை தவிர்க்கவேண்டும்.மது அருந்துதல்,பொய் பேசுதல்,மாமிசம் உண்ணுதல்,கோபம் கொள்ளுதல்,கடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது.

10.விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும் பேசி முடிக்கும் போதும் “ஸ்வாமி சரணம்” கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாக முன்னர் அதை எக்காரணம் கொண்டும் அதை கழட்டகூடாது.நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும்.பின்னர் மறுவருடம் தான் மாலை அணியலாம்.

11.விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது.இரவில் பாய்,தலையணை என்பவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும்.

12.மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை “மாளிகைப்புறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளை “கொச்சி” என்றும் அழைக்கவேண்டும்.

13.மாதவிலக்கான பெண்களை பார்ப்பது, அவர்கள் தயாரிக்கும் உணவை உண்பது கூடாது.மாதவிலக்கான பெண்களை அறியாமல் பார்க்க நேர்ந்தால் நீராடி 108 சரணம் கூறி வழிபடவேண்டும்.

14.மலைக்கு யாத்திரை புறப்பட சில நாட்களுக்கு முன்னர் விரிவான முறையில் பஜனை,கூட்டுவழிபாடு,பூஜை முதலியன நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி உணவளிக்க வேண்டும்.

15.இருமுடிக்கட்டு பூஜையை குருசாமி வீட்டிலோ,கோவிலிலோ நடத்தலாம்.கணபதியை பிரார்த்தித்து பெற்றோரை வணங்கி,ஐயப்பன் நாமத்தை சொல்லிக்கொண்டே கட்டு நிறைக்க வேண்டும்.

16.யாத்திரை புறப்படும் போது ஐயப்பன்மார்கள் போய் வருகின்றேன் என்றோ,தன்னுடன் வரும் ஐயப்பன்மார்களை வசதியாக அழைத்துச்செல்வதாகவோ,தன்னுடன் தைரியமாக வரலாம் என்றோ கூறக்கூடாது.

17.யாத்திரை புறப்படும் போது இருமுடியை தலையில் தாங்கி,வீட்டு வாசலில் ஐயப்பனை பிரார்த்தித்துக்கொண்டு தேங்காயை உடைத்து விட்டு சரணம் சொல்லி, போய்வருகிறேன் என எதுவும் கூறாது திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும்.

18.யாத்திரை புறப்பட்டதில் இருந்து கன்னி சாமிமார்கள் இருமுடியை தாமக ஏற்றிக்கொள்ளவோ,இறக்கவோ கூடாது.குருசாமியின் கையாலோ அல்லது பலமலை சாமியின் கையாலோ கொண்டு தான் அதை செய்யவேண்டும்.

19.பம்பையில் நீராடி,மறைந்த முன்னோர்க்கு பித்ருதர்ப்பணம் செய்யலாம்.யாத்திரை முடிந்துதும் பிரசாதங்களை ஏந்தி வந்து,வீட்டு வாசலில் தேங்காய் உடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பூஜை அறையில் பூஜை செய்து கற்பூர ஆராத்தி காட்டி,இருமுடி அரிசியை பொங்கி எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்.

20. 12 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

21.விரதகாலத்தில் மாலை போட்ட சாமிமார்களின் வீடுகளை தவிர வேறெந்த வீட்டிலும் ஐயப்பன்மார்கள் உணவருந்தக்கூடாது.

22.மாலைபோட்ட சாமிமார்கள் அதிலும் கன்னிசாமிமார்கள் மிகவும் கண்டிப்பாக பெருவழிப்பாதையில் செல்லவேண்டும்.

23.யாத்திரை நிறைவு பெற்றதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு ஐயப்பனை பாடித்துதிப்போமாக.

*+*+*+*+*+*+*+*+*+ஸ்வாமியே சரணம் ஐயப்பா*+*+*+*+*+*+*+*

10885009_10203630114295483_2151706076303162321_n 10897912_10203630096055027_922122951942566091_n 988964_10203630130055877_167808546534013886_n 10888907_10203630139016101_5613357462663291176_n 10885193_10203630139936124_8826493826670994799_n 10394075_10203630114775495_9030018648049915231_n 10422532_10203630121735669_390927363431774097_n 10429444_10203630116095528_5921889487853478050_n 10678786_10203630115575515_7645473595204317245_n 1901325_1513909412205269_2042668474227753181_n 1476171_10203630139656117_1323401836749204572_n  1517441_10203630140936149_1118171766507801149_n 10885563_10203630129735869_6188779454549258491_n 10898318_10203630130695893_5112596780362720473_n 10896854_10203630130415886_2515303441475090381_n 1975223_10203630131775920_1500233220602809499_n 10451335_10203630134575990_7116341695862508178_n 10363723_10203630131375910_659055931746862788_n 10858455_10203630094014976_7831561642087217380_n 10845993_10203630133055952_4123541390652338219_n 1907350_10203630136296033_1647849140575830806_n 1453326_10203630137176055_8075672116549184894_n 10675642_10203630136896048_4679160455529335021_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux