இது எமது இணையத்தில் முன்னர் பதிவு செய்யப்பட்ட செய்தி-ஒன்று
யாழ்ப்பாணம் வல்லிபுரம் புலோலி பகுதியினைச் சேர்ந்த,செல்வி.யுலக்சனா யோகா என்னும் பெயருடைய சிறுமி கடந்த 6 வருட காலமாக தொண்டைப்பகுதியில் புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்திய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் அவருக்கு இரண்டுதடவைகள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய்க் கட்டிகளை அகற்றினர்.
அதன் பின்னர் தொண்டைப்பகுதியில் துவாரம் இட்டு அதனாலேயே சிறுமி சுவாசிப்பதற்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து கிளினிக் சென்று வரும் சிறுமிக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்-தெரிவிக்கப்படுகின்றது.
பன்னிரெண்டு வயதாகும் சிறுமிக்கு தற்போது சுவாசக்குளாய் விரிவடையவில்லை என்றும் அவசரமாக சத்திரசிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.
வறுமையில் வாடும் இச்சிறுமியின் தந்தையோ நாட்கூலி வேலை செய்தே குடும்பத்தைக் காப்பாற்றுவதாகவும்-உடனடியாக சிறுமிக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு தம்மிடம் வசதியில்லையென்று என்று சிறுமியை வீட்டில் வைத்து பராமரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்கள் நகருமானால் இச்சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கவலை தெரிவிக்கப்படுகின்றது.
மற்றவர் துன்பத்தில் பங்கு கொள்ளும் கருணை உள்ளம் படைத்தவர்களே! இவர்களிடம் 0094779672133 என்ற இலக்கத்துடன் பேசுங்கள்!
இது எமது இணையத்தில் முன்னர் பதிவு செய்யப்பட்ட செய்தி-இரண்டு
மேலே இணைக்கப்பட்டுள்ள செய்தியினைப் பார்வையிட்ட பின் உலகின் பல பாகங்களிலிருந்தும் பலர் எம்மோடு தொடர்பினை ஏற்படுத்தியிருந்தனர்-ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர்களிடமிருந்து நிதியினைப் பெற முடியவில்லை-எம்மையும் எமது இணையத்தின் அறப்பணிச் சேவையினையும் அறிந்தவர்களிடமிருந்தே நாம் நிதியினைப் பெற்றுக் கொண்டோம்-தாமாகவே முன் வந்து தொடர்பினை ஏற்படுத்தி சிறுமிக்கு உதவிய கருணை உள்ளங்களின் பெயர் விபரங்களை கீழே இணைத்துள்ளோம்.இவர்களில் பலர் தமது பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று பெருந்தன்மையோடு கேட்டுக் கொண்ட போதிலும்-நாம் தொடர்ந்து அறப்பணியாற்றுவதற்கும்-எமது இணையத்தின் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கையினை தக்கவைத்துக் கொள்வதற்கும்-முழு விபரங்களையும் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்பதனை பணிவுடன் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
நிதி வழங்கிய கருணை உள்ளங்களின் பெயர் விபரங்கள்…..
01-அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதிகளின் நினைவாக(மண்டைதீவு-அல்லைப்பிட்டி -பிரான்ஸ்)100.00 ஈரோக்கள்
02-திரு.ஏரம்பு வேலும் மயிலும்-(மண்கும்பான்-பிரான்ஸ்) 200.00 ஈரோக்கள்
03-செல்வன் தில்லைநாதன் நிரோஜன்( வேலணை பிரான்ஸ்) 200.00 ஈரோக்கள்
04-திரு.தவவிநாயகம் சந்திரகுமார் (அல்லைப்பிட்டி பிரான்ஸ்) 100.00 ஈரோக்கள்
05-திரு .குலசேகரம்பிள்ளை சிறிஸ்கந்தராஜா (வேலணை பிரான்ஸ்) 100.00 ஈரோக்கள்
06-திரு,திருமதி சிறிதரன் சுபாஜினி( மண்டைதீவு மண்கும்பான் பிரான்ஸ்) 100.00 ஈரோக்கள்
07-திரு.செல்லையா சிவா (அல்லைப்பிட்டி பிரான்ஸ்)100.00 ஈரோக்கள்
08-திரு.செல்வராஜா ஏகலைவன் (புன்னாலைக்கட்டுவன் கிழக்கு surrey லண்டன் ) 70.00 ஈரோக்கள்
09-திரு.பிரதீபா ஜெயவீரசிங்கம்( மீசாலை Harrow லண்டன்) 60.00 ஈரோக்கள்
10-திருமதி அருந்ததி சந்திரலிங்கம்( அச்சுவேலி பிரான்ஸ்) 50.00 ஈரோக்கள்
11-செல்வன் சுபாஸ் (வேலணை பிரான்ஸ்)50.00 ஈரோக்கள்
12-திருமதி சிவகண்ணன் தயாழினி( வேலணை Harrow லண்டன்) 30.00 ஈரோக்கள்
13-திரு.யோகராசா( புங்குடுதீவு கொலண்ட்) 25.00 ஈரோக்கள்
மொத்தம் -1185.00 ஈரோக்கள்
மொத்தம்-1185.00 ஈரோக்கள் திரட்டப்பட்டு-13-12-2014 சனிக்கிழமை அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.என்பதனையும்-சில தினங்களின் பின்னர் ஆதாரங்கள் அனைத்தும் எமது இணையத்தில் உங்கள் பார்வைக்கு இணைக்கப்படும் என்பதனையும்-எம்மீது நம்பிக்கை வைத்து கருணையோடு உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது இணையத்தின் சார்பில் இதயபூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இது தற்போதைய செய்தி
அல்லையூர் இணையத்தினால் திரட்டப்பட்ட 1185 ஈரோக்களும்-அனுப்பிய செலவு தவிர்த்து-ஒரு இலட்சத்து 90ஆயிரம் இலங்கை ரூபாக்களாக மாற்றப்பட்டு-போதகர் மா.நவரட்ணராஜா அவர்களின் மேற்பார்வையில் சிறுமி யுலக்சனா,வின் பெயரில் பருத்தித்துறையில் அமைந்துள்ள இலங்கை வங்கிக்கிளையில் கணக்கு திறக்கப்பட்டு -பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன்-இப்பணத்தினை மருத்துவர்களின் அத்தாட்சிக்கடிதத்துடன் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறுமி யுலக்சனா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக-அவரது தாயார் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.சிறுமிக்கு விரைவில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக-மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுமி யுலக்சனாவின் கிராமத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தில் வைத்து-சமாதான நீதவான் முன்னிலையில்-அல்லையூர் இணையத்தினால் சிறுமியின் உயிர்காக்க-திரட்டி வழங்கப்பட்ட நிதி பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டு-சிறுமியின் தந்தையாரிம் அதற்கான ஆதாரம் கையளிக்கப்பட்டது.
பருத்தித்துறை இலங்கை வங்கிக் கிளையில் சிறுமி யுலக்சனாவின் பெயரில் வைப்பிலிடப்பட்டுள்ள -ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாக்களை-மீளப் பெறுவதானால்-மருத்துவர்களின் அத்தாட்சிக்கடிதமும் அதற்கான சரியான ஆதாரமும் காட்டினால் மட்டுமே பணத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக வைப்பிலிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.