அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழா-கடந்த 04-12-2014 வியாழக்கிழமை அன்று வித்தியாலயத்தின் அதிபர் என்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்டின் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டதுடன்-
அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பிரதி எடுக்கும் இயந்திரம் ஒன்றினையும் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.மேலும் இவ்விழாவில் அல்லைப்பிட்டி பங்குத்தந்தை எம்.பத்திநாதர் அவர்களினால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன்-மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.