கிளிநொச்சியில் கல்வியில் ஆர்வமுள்ள மாணவிக்கு உதவிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கிளிநொச்சியில் கல்வியில் ஆர்வமுள்ள மாணவிக்கு உதவிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

Scan10009

 

கிளிநொச்சியில் வறுமையில் மனம் தளராது  திறமையுடனும்,ஆர்வத்துடனும்  கல்வி கற்று வரும் மாணவி ஒருவர் -தனது மேற்படிப்புக்குத் தேவையான நூல்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவிட முடியுமா?என்று தனது உறவினர் ஒருவரின் மூலம் அல்லையூர் இணையத்திற்கு விடுத்த வேண்டுகோளினை ஏற்று-15.000,(பதினையாயிரம் ரூபாக்களுக்கு) மாணவிக்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் பெற்றுக் கொடுத்தது அல்லையூர் இணையம்.

அல்லையூர் இணையத்தின் இச்சேவைக்கான நிதியினை-அமரர்கள் திரு திருமதி,இரத்தினசபாபதி,சிவயோகலட்சுமி தம்பதியினரின் நினைவாக ,அவர்களின் புதல்வர் வழங்கியிருந்தார்.

உதவியினைப் பெற்றுக் கொண்ட மாணவி-அல்லையூர் இணையத்திற்கும்,அதன் ஊடாக பணத்தினை வழங்கிய நல் இதயத்திற்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

உதவி பெற்ற மாணவியின் தந்தையார்   நோய் காரணமாக அண்மையில் காலமானார்-என்பதனையும் இத்தோடு இணைத்துக் கொள்கின்றோம்.

T3

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux