யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் தீவக பிரதான வீதியினை- அகலப்படுத்தி காபட் வீதியாக மாற்றும் பணிகள் தற்போது மெதுவாக ஆனால் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.
அதி உயர் தொழில் நுட்பத்துடன் கனரக இயந்திரங்களின் துணையுடன் இவ்வீதி அகலப்படுத்தப்படும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இவ்வீதி அகலப்படுத்தும் பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டாலும்-முழுமையாக பணிகள் நிறைவடைய நீண்டகாலம் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அல்லைப்பிட்டி பழைய அலுமினியம் தொழிற்சாலை வரை,அகலப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.
ஊர்காவற்றுறை வரை அமைக்கப்படும் இக்காபட் வீதியின் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும்-யாழ் பண்ணையிலிருந்து-அல்லைப்பிட்டி சந்தி வரை 8 நிமிடங்களில் கடந்து விடமுடியும் என்று அல்லைப்பிட்டியில் அமைக்கப்பட்டுள்ள hotel ஒன்றின் விளம்பரம் தெரிவிக்கின்றது.