இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் தொடர்ச்சியாக அல்லைப்பிட்டியிலும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட-வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 246 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.இப்பொருட்கள் வேலணை ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் அல்லைப்பிட்டி உப கிளையின் ஊடாகவே வழங்கப்பட்டதாக மேலும் தெரிய வருகின்றது.
