கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த,தீவகம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் -தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
மழை தொடர்ந்து பெய்வதனால் வறட்சி மாறி குளங்களிலும் தாழ்நிலப்பகுதிகளிலும் நீர் தேங்கிக் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மழையைத் தொடர்ந்து விவசாயிகள் ஆர்வத்துடன் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டிருப்பதனை கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்களில் காணலாம்.
அல்லைப்பிட்டி-அனலைதீவு-தனங்கிளப்பு-மட்டக்களப்பு-பளுகாமம்-தும்பங்கேணி ஆகிய பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
அத்தோடு அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள பெரியமண்குளி குளத்தில் நீர் தேங்கி நிற்பதனையும்-குளக்கரையில் கால்நடைகள் மகிழ்ச்சியுடன் மேய்வதையும் கீழே நிழற்படங்களாக உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
வறட்சியின் கொடுமையிலிருந்து தற்காலிக விடுதலை கிடைத்திருப்பது கால்நடைகளுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி தானே….
நன்றி-அனலை அறநெறி
நன்றி-அனலை திரு மயில்வாகனம்
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!