வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்டம் கடந்த ஒக்ரோபர் மாதம் 20 ஆம் திகதி நாடெங்கிலுமுள்ள 14,022 கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அல்லைப்பிட்டியிலும் கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்ட 90க்கும் அதிகமான பயனாளர்களுக்கு விதை நாற்றுக்கள்-பயனுள்ள மரக்கன்றுகள் என்பன வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலஸ்ரின் உதயன் அவர்களுடன் வேலணை பிரதேச செயலர் -வேலணை பிரதேசசபை தவிசாளர்,அல்லைப்பிட்டி கிராம சேவையாளர் மற்றும் பெருமளவான பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புதிய குடியிருப்பில் அமைந்துள்ள டேவிற் முன்பள்ளியிலேயே நிகழ்வு நடைபெற்றதாக-மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.