அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி அருளப்பா கிறிஸ்ரினா (புஸ்பம்) அவர்களின் முதலாம் ஆண்டு தின நிகழ்வுகள்-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 13-10-2014 திங்கட்கிழமை அன்று நடைபெற்றதுடன்-அன்று மாலை அல்லைப்பிட்டி கார்மேல் அன்னையின் ஆலயத்தில் விஷேட திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டியிலிருந்து அல்லையூர் இணையத்தில் பதிவு செய்யும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் அன்னாரின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய- எல்லாம் வல்ல அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள கார்மேல் அன்னையிடம் மன்றாடுவோமாக!