ஆர்.ரி.எம் பிறதர்ஸ் வழங்கிய 2 இலட்சம் ரூபாக்களை،விழிப்புலன் இ.சங்கத்தின்  கரங்களில் ஒப்படைத்த அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

ஆர்.ரி.எம் பிறதர்ஸ் வழங்கிய 2 இலட்சம் ரூபாக்களை،விழிப்புலன் இ.சங்கத்தின் கரங்களில் ஒப்படைத்த அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

பரிஸில் வருடந்தோறும் கலைத்தென்றல்  என்னும்  இசைநிகழ்வினை நடத்திவரும் ஆர்.ரி.எம் பிறதர்ஸ் நிறுவனம்  இம்முறை 28-09-2014 ஞாயிறு அன்று நடத்தப்பட்ட 22வது கலைத்தென்றல் இசைவிழாவின் போது -யாழ் மாவட்ட விழிப்புலன் இழந்தோர்  சங்கத்திடம் வழங்குவதற்காக-அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்களிடம்  அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் கரவோசத்துடன் மேடையில் வைத்து ஆர்.ரி.எம் பிறதர்ஸ்,களில் ஒருவரான திரு இரா.குணபாலன் அவர்கள் வழங்கினார்.

அல்லையூர் இணையம் ஆற்றிவரும் அறப்பணிச் சேவையினை எமது இணையத்தின் ஊடாக அறிந்து கொண்ட ஆர்.ரி.எம் பிறதர்ஸ் நிறுவனம் எம்மீது நம்பிக்கை வைத்து 2 இலட்சம் ரூபாக்களை எம்மிடம் வழங்கியதையடுத்து -அப்பணத்தினை அல்லையூர் இணையத்தின் சார்பில் பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் 11-10-2014 சனிக்கிழமை அன்று  விழிப்புலன் இழந்தோர் சங்கத்தின் பணிமனைக்கு எடுத்துச்  சென்று சங்கத்தலைவரின் கரங்களில் ஒப்படைத்தார்.

விழிப்புலன் இழந்தோர்  சங்கத்தின் சார்பில்-பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான பற்றுச்சீட்டும் அத்தோடு ஆர்.ரி.எம். நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கடிதமும் வழங்கியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தில் இயங்கும் இந்த  விழிப்புலன் இழந்தோர் சங்கத்தில் மட்டும் 200க்கும் அதிகமான விழிப்புலன் இழந்தோர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக  மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Scan10016

Scan10017

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURESP1080402 P1080362

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux